அனல் பறக்கும் வெயிலுக்கு இடையே.. 5 மாவட்டங்களில் இன்று கனமழை பிச்சு உதறப் போகுது! வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும் எனவும், நாளை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. அதே நேரம் இன்று தலைநகர் சென்னையில் வெயில் வாட்டி வதைக்கும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இடையிடையே மழை பெய்தாலும் திடீரென கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றன. கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் பெரிதாக தெரியவில்லை.

ஆனால் நேற்று மற்றும் இன்று பல்வேறு இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. தலைநகர் சென்னையிலும் மக்கள் வெளியே வரமுடியாதபடி கொளுத்தி எடுத்தது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். நாளை தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கனமழை வெளுத்து வாங்கும். சென்னையில் இன்று 180 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
-
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications