கடலை கலந்த உணவைச் சாப்பிட்டவர் பலி.. இங்கிலாந்தில் இந்திய ஹோட்டல் அதிபர் மீது புகார்!
லண்டன்: இங்கிலாந்தில் நிலக்கடலை உணவைச் சாப்பிட்டவர் அலர்ஜி காரணமாக பலியான விவகாரத்தில், இந்திய ஹோட்டல் அதிபர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஈசிங்வேர்ல்டு என்ற பிரபல மார்க்கெட்டில் இந்தியன் கார்டன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் முகம்மது காலிக் சமான் ( 52). இவர் ஹோட்டல் தொழிலில் சிறந்த சேவைக்கான விருது பெற்றவர்.

கடந்தாண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்தின் வடக்கு யார்க்ஷயரில் உள்ள திரிஸ்க் என்ற பகுதியைச் சேர்ந்த பால்வில்சன் (38 ) என்பவர், இந்தியன் கார்டன் ஹோட்டலில் சாப்பிடச் சென்றார். அங்கு நிலக்கடலையால் தயாரிக்கப்பட்ட உணவை அவர் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார் பால்வில்சன். தனது அலர்ஜி நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பால்வில்சன், சிகிச்சைப் பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.
இங்கிலாந்தில் ஓட்டல்களில் உணவு சாப்பிடுவதால் பொதுமக்களுக்கு அலர்ஜி ஏற்படுவது தொடர்பாக சமீபத்தில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, அச்சட்டத்தின் படி, பால்வில்சன் மரணம் தொடர்பாக, ஹோட்டல் உரிமையாளர் முகம்மது காலிக் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உணவக விடுதி உரிமையாளர்கள் மீது இது போன்ற வழக்கு தொடரப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications