அமெரிக்க கார் விபத்தில் இந்திய மாணவி உள்பட 4 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த பயங்கர கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளம் மாணவி உள்பட 4 பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சமீப காலத்தில் அமெரிக்காவில் நடந்த மிகப் பெரிய விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த விபத்துக்குக் காரணம் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய பெண்தான் என்று தெரிய வந்துள்ளது.
விபத்தில் இறந்த நான்கு பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 வயதுக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தது.

உயிரிழந்தவர்களில் நிகிதா நகல் என்பவர் இந்தியாவசை் சேர்ந்த மாணவி ஆவார். மும்பையைச் சேர்ந்தவர் இவர். இவர் மத்திய ஓக்லஹாமா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
இந்த விபத்துக்குக் காரணமான 25 வயதான அடாசியா அவெரி சாம்பர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குடிபோதையில் இருந்தது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
ஓக்லஹாமா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூட்டம் நடந்தது. அதற்காக நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் திரண்டிருந்தனர். அவர்களின் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென சாம்பர்ஸ் ஓட்டி வந்த வாகனம் வேகமாக மாணவர்கள் மீது மோதியது. அதற்கு முன்பு ஒரு போலீஸ்காரரின் பைக்கில் மோதினார் சாம்பர்ஸ். இந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் 8 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், 9 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும், 17 பேர் லேசான காயத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications