இடுப்பு ஆபரேஷனுக்குதான் போனார் ரீடா.. ஆனால் இப்படியா அநியாயத்துக்கு இறந்து போவார்!
ஆபரேஷனுக்கு துபாய் சென்ற இந்திய பெண் உயிரிழந்தார்.
துபாய்: துபாயில் வசித்துவந்த ரீடா இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக போன இடத்தில் பரிதாபமாக மரணத்தைத் தழுவினார்.
மும்பையை சேர்ந்த பெண் ரீடா பெர்னாண்டஸ்! 42 வயதான இவருக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு ஹோட்டலில் செஃப்-ஆக இருந்தவர்.

திடீரென இடுப்பில் பிரச்சனை ஏற்பட்டதால், ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால் துபாயில் அல் சகாரா என்ற ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மே 9-ம்தேதிதான் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆனால் 2 மணி நேரம் ஆபரேஷன் நடந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 2 மணி நேரம் நடத்தப்பட்ட ஆபரேஷனில் என்ன பிரச்சனை? எப்படி திடீரென இறந்தார்? என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது ஆவேசப்பட்டனர். ஆனால் ரீடாவுக்கு ஆபரேஷன் எப்படி நடந்தது, உட்பட எல்லா விவரத்தையும், குடும்பத்தினருக்கு வெளிப்படையாக சொல்லிவிட்டோம் என்று ஆஸ்பத்திரி நிர்வாம் பதிலளிக்கிறது.
மேலும் ரீடா, பிறந்தபோதே, அவருடைய இடுப்பு எலும்பு இடம் மாறி இருந்தது என்றும், இதை அவரது குடும்பத்தினரிடம் சொல்லி அதன்பிறகு, அவர்களின் அனுமதியை வாங்கித்தான் ஆபரேஷன் செய்தோம் என்றும் ஆஸ்பத்திரிதரப்பு விளக்கம் தருகிறது.
இந்த பதிலை உறவினர்களால் ஏற்கவே முடியவில்லை. ஆபரேஷனுக்கு வந்த மனைவி இப்படி திடீரென உயிரிழந்துவிட்டதால், இது சம்பந்தமான விசாரணை வேண்டும் என்று ரீடாவின் கணவர் புகார் தந்துள்ளார். இதையடுத்து, துபாய் சுகாதார ஆணையம் இது பற்றி விசாரித்து வருகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications