நம்ம ஊர் மாதிரி இல்லை! இத்தாலியில் இந்திய பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி.. இப்படி கூட இருக்குமா! செம
ரோம்: இந்தியாவில் ஐடி ஊழியர்கள் போதிய சம்பளம் இல்லாதது, ஓவர் டைம், ஒர்க் லைஃப் பேலன்ஸ் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் புலம்பி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் இத்தாலியில் வேலைக்குச் சேர்ந்த இந்தியப் பெண் ஐடி ஊழியர் ஒருவர், அங்குள்ள ஒர்க் கல்சர் குறித்து வியந்துள்ளார். இது தொடர்பாக அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அதிலும் இப்போது அமெரிக்காவில் கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படி இத்தாலி நாட்டிற்குச் சென்ற ஐடி வல்லுநரான ஜோதி, அங்கு அலுவலகத்தில் தனது முதல் நாள் அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

இத்தாலி ஒர்க் கல்சர்
இத்தாலி நாட்டில் உள்ள ஒர்க் கல்சர் தனக்கு இன்ப அதிர்ச்சி அளித்ததாக அவர் பதிவிட்டுள்ளார். குறிப்பாக மாலையில் 6:01 மணிக்கு ஒட்டுமொத்த அலுவலகமும் காலியாகிவிட்டதாம்.. வேலை நேரம் முடிந்த பின் வேலைக்காக சக ஊழியர்களைத் தொடர்பு கொள்வது, கிட்டத்தட்ட "குற்றம்" போல் கருதப்படுவதாகச் சொல்லி அவர் வியந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும், "நான் எனது பாஸை சார் என்று அழைத்ததும், சக ஊழியர்கள் சிரித்துவிட்டனர், பெயர் சொல்லியே கூப்பிட வேண்டும் என்றும் எல்லோரும் சமம் என்றும் விளக்கினர். காபி குடிக்கச் சென்றபோது பணத்தைச் செலுத்த முயன்றேன். அப்போது எனது மேனேஜர் தடுத்துவிட்டார். நான் தான் எப்போதும் பணத்தைச் செலுத்துவேன் எனச் சொல்லி அவரே பணத்தைச் செலுத்தினார்.
6.01க்கு நடந்த மாற்றம்
மேலும், இன் டைம்- அவுட் டைம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.. எத்தனை மணிக்கு அலுவலகம் வருகிறோம்.. எப்போது கிளம்புகிறோம் என்று யாரும் கேட்பதில்லை. அவர்களுக்குத் தேவை வேலை முடிய வேண்டும் அவ்வளவு தான்.. இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களைக் கவனித்துக் கொண்டு இருப்பதில்லை. மாலை 6:01 மணிக்கு அலுவலகம் வெறிச்சோடிவிடும். வேலை நேரத்திற்குப் பிறகு வேலை தொடர்பாக அழைப்பு / குறுஞ்செய்தி அனுப்புவது 'குற்றம்' போன்றது, அது அவரவர் தனிப்பட்ட நேரம்.
ஒருமுறை சக ஊழியர்கள் பிரேக்கிற்கு அழைத்தபோது பிஸி என நான் சொல்லிவிட்டேன். அது மிகப் பெரிய தவறு! அங்கு காபிக்கும் பிரேக்கிற்கும் எப்போதும் நேரம் உண்டு. அதுவே அன்றைய நாளின் முக்கியமான சந்திப்பு என்றார்கள். காபி குடிக்கும்போது வேலையைப் பற்றிப் பேச முயன்றேன்.. பிரேக் சமயத்தில் வேலை பற்றிப் பேசக் கூடாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
தப்பு செய்தாலும் பிரச்சனை இல்லை
இங்கிருந்த ஊழியர்கள் என்னைத் தங்கள் க்ரூபில்.. அவர்களில் ஒருவராக அரவணைத்துக் கொண்டனர். முன்பெல்லாம் வேலையில் சிறு தவறுக்கும் பயந்தேன். ஆனால், எனது மேனஜர் தான் தவறு பிரச்சினை இல்லை.. அதில் இருந்து கற்றுக்கொள் எனச் சொல்லி ஊக்கப்படுத்தினார். வீட்டிற்குக் கிளம்பும்போது கூட அன்பான பிரியாவிடைகள் கிடைத்தன.
இத்தாலிய மொழி தெரியாது பற்றிக் கவலைப்பட்டபோதும், அதை விமர்சிக்காமல் வழிகாட்டினர். வீக் எண்ட்டில் பிளான் எதுவும் இல்லாமல் இருந்தேன். ஆனால், வீக் எண்ட்டில் வெளியே சென்று போட்டோவை காட்டியே தீர வேண்டும் என வெளியே செல்வதை ஊக்கப்படுத்தினர். அலுவலகம் என்பது வெறும் வேலைக்கானது அல்ல.. அதுவும் உறவுகளை உருவாக்குவதற்கான இடம் என்பதைப் புரிந்து கொண்டேன்.. இங்கு யாரும் ஊழியர்களை ஊழியர்களாகப் பார்ப்பதில்லை.. மனிதராகவே பார்க்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
மேலும், இத்தாலியின் இந்த ஒர்க் கல்சர் தனக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பதாகவும் இங்கிருந்து ஒருபோதும் வரக்கூடாது என்றே நினைப்பதாகவும் ஜோதி பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்திய ஐடி செக்டாரில் நீண்ட நேர வேலைகள், ஒர்க் லைஃப் பேலன்ஸ் இல்லாமல் இருப்பது, வேலை நேரம் முடிந்த பிறகும் ஆபீஸ் கால்கள் என்றே சூழல் இருக்கும் நிலையில், அதற்கு நேர்மாறாகவே இத்தாலி இருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications