வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை!
தெஹ்ரான்: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு தூது குழுவை ஈரான் அனுப்பியிருக்கிறது.
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கத்திப்சாதே, அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு ஈரான் தூதுக்குழு செல்வதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் வளைகுடா வாழ் இந்தியர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர்.

அமெரிக்க தூதுக்குழுவை துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வழிநடத்துவார் என்றும், ஈரான் தூதுக்குழுவை பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் வழிநடத்துவார் என்றும் கத்திப்சாதே தெரிவித்தார். இருதரப்புக்கும் இடையே பாகிஸ்தான் மூலம் இரவு முழுவதும் செய்திகள் பரிமாறப்பட்டதாக அவர் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஈரானின் தேசிய நலனுக்கு உட்பட்டவை என்றும், அவற்றை நிறைவேற்றுவதில் ஈரான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கத்திப்சாதே வலியுறுத்தினார்.
ஈரானை ஒட்டிய பகுதிகளில், அதாவது லெபனான் உட்பட போர் நிறுத்தம் வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், லெபனான் மீது இன்று இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருந்தது. இந்த தாக்குதல், அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல் என்று கத்திப்சாதே குற்றம்சாட்டியுள்ளார்.
"நீங்கள் போர் நிறுத்தத்தைக் கோர முடியாது. மறுபுறம் உங்கள் நட்பு நாடு படுகொலையைத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா ஒன்று போரை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் போர் நிறுத்தத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை" என்று கத்திப்சாதே கடுமையாக அமெரிக்காவை சாடியுள்ளார். எது எப்படி இருப்பினும், பாகிஸ்தானுக்கு ஈரான் அமைதி குழுவை அனுப்பியிருப்பது சர்வதேச அளவில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தை காலங்களில் வளைகுடா நாடுகள் மீது ஈரான் எந்த தாக்குதலையும் நடத்தது. எனவே, இங்குள்ள இந்தியர்கள் அச்சமடைய வேண்டியதில்லை. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், போர் தொடர்பாக சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications