கூட்டம் கூட்டமாக கிளம்பும் இந்தியர்கள்.. 1998க்கு பிறகு இதுதான் முதல்முறை! ஸ்வீடனில் என்ன நடக்கிறது?
ஸ்டாக்ஹோம்: அதிகமான இந்தியர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறுகிறார்கள், இந்த ஆண்டின் முதல் பாதியில் புலம்பெயர்ந்த வெளிநாட்டினரில் இந்தியர்கள்தான் அதிகம். ஜனவரி மற்றும் ஜூன் 2024 க்கு இடையில், 2,837 இந்தியர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறினர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 171% அதிகமாகும். 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஸ்வீடன், இந்த அளவுக்கான இந்தியர்களின் வெளியேற்றத்தை (வருடத்தின் முதல் பாதி கணக்குப்படி) இப்போதுதான் பார்க்கிறது.
டெல்லியில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தின் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் ஆலோசகர் பெர்-ஆர்னே விக்ஸ்ட்ராம் கருத்துப்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில், ஸ்வீடனில் 50,000 இந்தியர்கள் வசித்து வந்தனர். இருப்பினும், முதல் முறையாக, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் குடிபெயருவதை விட வெளியேறுகிறார்கள்.

ஸ்வீடன்-இந்திய வணிக கவுன்சிலின் பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராபின் சுகியா, இந்தப் போக்கு குறித்து கருத்துத் தெரிவித்தார்: "இதற்கு சிறப்புக் காரணம் இருக்கும் என்றுதான் நினைக்கிறோம். இருப்பினும் முழு ஆண்டு மதிப்பீட்டிற்காக காத்திருக்க வேண்டியிருக்கும். கடந்த சில ஆண்டுகளில் ஸ்வீடனில் அதிக செலவுகள் ஆகிறது. விலைவாசி கூடியுள்ளது. சர்வீஸ் அபார்ட்மென்ட்கள் கிடைக்கவில்லை, பொதுவாகவே வீடுகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதுதான் முக்கிய காரணமாக தெரிகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அதிக தகுதி வாய்ந்த புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்ட பணி அனுமதிகளின் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது. இந்த காலக்கெடுவிற்குள், இந்திய குடிமக்களுக்கான முதல் முறை வேலைவாய்ப்பு உரிமம் 30% குறைந்துள்ளது. இந்த மாற்றங்கள் IT பணிநீக்கங்கள் மற்றும் கடுமையான பணி அனுமதி விதிமுறைகள் காரணமாகும்.
20 ஆம் நூற்றாண்டில் மாணவர்கள், தொழிலாளர் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோர் ஸ்வீடனில் குடியேறத் தொடங்கினர். இந்த காலகட்டத்தில் ஸ்வீடிஷ் குடும்பங்களும் இந்தியக் குழந்தைகளைத் தத்தெடுக்கத் தொடங்கின. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய குடியிருப்பாளர்களின் அதிகரிப்புக்கு குடும்ப மறு ஒருங்கிணைப்பு மற்றும் அதிகரித்த குடியேற்றச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்ததாக ஐரோப்பிய பல்கலைக்கழக நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 3,681 ஆக இந்தியர்கள் குடியேற்றம் இருந்தது. இந்த வருடம் இது 2,461 ஆகும். கோவிட் காலத்தை தவிர்த்தால், 2017க்குப் பிறகு இப்போது மிக குறைவாக இந்தியாவிலிருந்து, மக்கள் குடியேறியுள்ளனர்.
முன்னதாக, ஐடி போன்ற துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப ஸ்வீடனின் முயற்சிகள் காரணமாக 2009 முதல் இந்திய குடியேற்றத்தில் நிலையான அதிகரிப்பு இருந்தது. அதிக தகுதி வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்ந்தோரை ஈர்க்க ஸ்வீடன் ஆர்வமாகவே உள்ளது. ஆனால்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications