இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
ஜகர்தா: இந்தோனேசியாவில் பாலித் தீவு மற்றும் கிழக்கு ஜாவா மகாணத்தில் ஏற்பட்ட திடீர் நிலக்கடுத்தினால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது: பாலித் தீவு மற்றும் கிழக்கு ஜாவாவில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மலாங் மகாணத்துக்கு தென்கிழக்கான 127 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது என்றும், கடலுக்கு அடியில் 69 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்தது என்றும் அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்திற்காக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். நாட்டின் மேற்குப் பகுதியான பாலி மற்றும் ஜாவாவில் இந்நிலநடுக்கத்தினால் பெரும் நில அதிர்வு தென்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலநடுக்கத்தினால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ எற்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பகுதி மக்கள் பெரும் பீதிக்குள்ளாகி இருக்கின்றனர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாலி தீவிற்கு தினமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2 லட்சம் பேர் வந்து செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications