கொரோனா நோயாளியுடன் ஆஸ்பத்திரி டாய்லெட்டில் செக்ஸ் வைத்து கொண்ட நர்ஸ்! அதிர்ச்சி சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில கொரோனா நோயாளியுடன் மருத்துவமனை கழிவறையில் செக்ஸ் வைத்து கொண்ட செவிலியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் உலகில் பரவ தொடங்கிய கொரோனா கடந்த ஓராண்டில் கோடிக்கணக்கான மக்களை பாதித்துவிட்டது. பல லட்சம் பேரை கொன்றுவிட்டது. இன்றுவரை பல நாடுகளில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.

இந்த கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் ந்தோனேஷியாவில் நடநதுள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பணியிலிருந்த செவிலியர் ஒருவர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் பாலியல் உறவு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா நோயாளி

கொரோனா நோயாளி

இந்தோனேசியாவில் ஜகார்த்தாவில் அமைந்துள்ள விஸ்மா அட்லெட் மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அங்கு பணியாற்றும் நர்ஸ் ஒருவருடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கழிவறையில் பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப் உரையாடல்

வாட்ஸ் அப் உரையாடல்

கொரோனா நோயாளி சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ மூலம் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனா நோயாளி பகிர்ந்த வீடியோவில் செவிலியரின் பிபிஇ கிட் கழிவறையின் கீழ் கிடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது பூதாகரமாகி உள்ளது. இதேபோல் இருவரும் வாட்ஸ்அப்பில் பேசிய உரையாடல்களும் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

கொரோனா இல்லை

கொரோனா இல்லை

இதையடுத்து பெண் செவிலியர் மருத்துவமனையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் கொரோனா நோயாளி உடன் அவர் பாலியல் தொடர்பில் இருந்ததால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மருத்துவ பரிசோதனையின் முடிவில் செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கைது

கைது

கொரோனா தொற்று இல்லையென்றாலும் அவரை சில நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், நர்ஸ் மற்றும் கொரோனா நோயாளி இருவரையும் கடுமையான வன்கொடுமை சட்டத்தின் கீழ் அந்நாட்டு பேசாலீசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டினருக்கு தடை

வெளிநாட்டினருக்கு தடை

இந்தோனேசியாவில் தற்போது வரை 7,27,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 21,000 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனா தற்போது வேகமாக பரவி வருவதால் இந்தோனேஷியாவிற்கு தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+