சீன வேக்சின் போட்டு கொண்ட.. மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி.. மேலும் பலருக்கு வைரஸ் தொற்று

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: இந்தோனேசியா நாட்டில் சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    Vaccine போட்ட பின்பும் பலியான மருத்துவர்கள்.. Indonesia-வில் பலன் கொடுக்காத China-வின் Sinovac

    கொரோனா வைரசை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் கடுமையாகப் போரடி வருகின்றன. உலக வல்லரசு நாடுகள்கூட கொரோனாவை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.

    இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    கொரோனாவை எதிர்கொள்வதில் வேக்சின்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் முதலில் மருத்துவர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்கு வேக்சின் அளித்த பின்னரே பொதுமக்களுக்கு வேக்சின்களை அளிக்கின்றனர். இதன் மூலம் முன்களப் பணியாளர்களுக்கு ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்பது வல்லுநர்களின் கருத்து.

    இந்தோனிஷா மருத்துவர்கள்

    இந்தோனிஷா மருத்துவர்கள்

    அதன்படி இந்தோனிஷாவில் மருத்துவர்களுக்குச் சீன தடுப்பூசியான சினோவாக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் சினோவாக் வேக்சினின் 2 டோஸ் எடுத்துக் கொண்ட பிறகும்கூட சுமார் 20 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாகக் கடந்த 2 வாரங்களில் மட்டும் சினோவாக் வேக்சின் எடுத்துக் கொண்ட 358 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சினோவாக்

    சினோவாக்

    இது சினோவாக் வேக்சின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. சீனாவின் சினோவாக் வேக்சின் மருத்துவ சோதனைகளில் 51% பலன் அளிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஒரு வேக்சின் அனுமதி பெறக் குறைந்தபட்சம் 51% செயல்திறன் கொண்டிருக்க வேண்டும். அந்த அளவு செயல்திறனை மட்டுமே சினோவாக் கொண்டுள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள வேக்சின்களேயே சினோவாக் தான் குறைவான தடுப்பாற்றலை கொண்டிருக்கிறது. இருப்பினும், அதுவும்கூட முறை சோதனைகளில் பெறப்பட்ட முடிவுகள் இல்லை எனச் சர்வதேச ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்,

    ஏன் சினோவாக்

    ஏன் சினோவாக்

    இந்தோனேசியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சில மருத்துவர்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. சினோவாக் வேக்சின் தடுப்பாற்றல் குறைவு என்ற போதிலும் இந்தோனேசியாவுக்குத் தேவைப்படும் அளவுக்கு சினோவாக் வேக்சின் மட்டுமே கிடைக்கும் என்பதால் அதைக் கொண்டு வேக்சின் பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+