For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாடை என் மாதிரி இல்லையே.. குழந்தை யாருக்கு பிறந்தது.. வெறிபிடித்த அப்பா.. கடைசியில் பார்த்தால்.. செம

தன் பிறப்பின் ரகசியத்தை இளம்பெண் ஒருவர் 40 வருடம் கழித்து கண்டறிந்துள்ளார்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: சந்தேகம் ஒரு குடும்பத்தையே அழித்துவிடும் என்றாலும், சில சமயங்களில், சில சந்தேகங்கள், பல குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவதும் உண்டு.. அப்படி ஒருசம்பவம்தான் இப்போது நடந்துள்ளது.

சந்தேக கோடு சந்தோஷ கேடு என்பார்களே.. அது முற்றிலும் உண்மை... மனநிலைக்கோளாறால் மட்டுமல்லாமல், சூழ்நிலை, துணையின் குணாதிசயங்களாலும் நிறைய சந்தேகங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல், சந்தேகப்படுபவர்களுக்கு, கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒரு பெண் அல்லது ஆணுடன் சாதாரணமாக பேசினால்கூட, அது தவறான உறவாக சந்தேகப்பட்டு, ஒருவரின் முழு குணாதிசயத்தையும் மலிவாக்கிவிடுகிறது.

 டவுட்

டவுட்

சந்தேக குணத்துக்கு படித்தவர், படிக்காதவர் என்றெல்லாம் தெரிவதில்லை. இது நம் ஊரில் நடப்பதுபோலவே வெளிநாடுகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதிலும் பிறந்த குழந்தை தன் ஜாடை போல இல்லை என்று சொல்லி எத்தனையோ குடும்பங்கள் பிரிந்த வரலாறும் உண்டு.. நம்முடைய திருவண்ணாமலை மாவட்டத்தில்கூட 2 வருடம் முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. கார்த்திகேயன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு 5 வருடம் கழித்துதான் குழந்தை பிறந்துள்ளது.

நைட்

நைட்

ஆனால், அந்த குழந்தை தன் ஜாடையில் இல்லை என்று, மனைவியிடம் சந்தேகப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டே இருந்தார் கார்த்திகேயன்.. அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் வெறுப்பு அதிகமாகி கொண்டே போனது.. அதனால், நைட் தன்னுடைய பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த 3 மாத பச்சிளம் குழந்தையை, அரிவாள் எடுத்து வெட்டிக் கொன்றுவிட்டார்.. குழந்தையின் உடல் துண்டு துண்டாக சிதறியது.. எவனுக்கோ பிறந்த குழந்தை, என்னை அப்பான்னு கூப்பிடுவதை என்னால ஏத்துக்க முடியாது என்று ஆவேசமாக கத்தினார் கார்த்திகேயன்..

 பச்சிளம் சிசு

பச்சிளம் சிசு

அதற்கு பிறகு கைது, விசாரணை என்றெல்லாம் நடந்தது. இதுபோலவே ஒரு சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.. ஆனால், அதை ஒரு பெண் எப்படி டீல் செய்துள்ளார் என்பதுதான் ஹைலைட்டான விஷயம்.. ரஷ்யாவை சேர்ந்தவர் வேலண்டினா.. இவரது அல்யோன்யா ரோமான்வா.. இவருக்கு 39 வயதாகிறது.. இவர் பிறந்தபோது, அப்பா ஜாடையில் இல்லையாம்.. உடனே வேலண்டினா மீது கணவருக்கு சந்தேகம் திரும்பி உள்ளது.. குழந்தை பிறந்ததும் ஜாடை இல்லாமல் இருக்கலாம், வளர்ந்த பிறகு சரியாகிவிடும் என்று வேலண்டினா கணவரை சமாதானம் செய்துள்ளார்..

 ஜாடை

ஜாடை

ஆனால், அல்யோன்யா வளர வளர, அப்பா ஜாடை சுத்தமாக இல்லாமல் இருந்துள்ளது.. பார்ப்பதற்கு ஒரு ஆசிய நாட்டை சேர்ந்தவர் போலவும் இருந்துள்ளார்.. இது போதாதென்று, உள்ளூர்வாசிகளும், அல்யோன்யாவை பார்க்கும்போதெல்லாம் வித்தியாசமாக தெரிகிறாரே, ஜாடை வேற யார் போலவே இருக்கிறதே என்று தூண்டிவிட்டுள்ளனர்.. இதெல்லாம் சேர்ந்து, மனைவியையும், மகளையும் அந்த தந்தை, அளவுக்கு அதிகமாகவே கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.. சிறிய வயதிலேயே ஏராளமான இன்னல்களை அல்யோன்யா அனுபவித்ததுடன், அப்பாவிடம் சிக்கி சீரழியும் அம்மாவை கண்டும் கண்ணீர் விட்டார்.

 DNA டெஸ்ட்

DNA டெஸ்ட்

நாளடைவில், தன் பிறப்பு மீது அல்யோன்யாவுக்கே சந்தேகம் வந்துவிட்டது.. அதெப்படி இந்த உருவம் வரும்? அப்பா மாதிரியும் இல்லாமல், அம்மா மாதிரியும், ரஷ்ய நாட்டுப்பெண், ஆசிய நாட்டை சேர்ந்தவர் போல எப்படி இருக்க முடியும்? என்று யோசித்தார்.. இதற்கான காரணத்தை அறிந்து, சந்தேக கொடுமையில் இருந்து தன்னுடைய அம்மாவையும் மீட்க முடிவு செய்தார். அதன்படி, தன் பிறப்பு குறித்த நிறைய ஆராய்ச்சிகளில் இறங்கினார்.. கடைசியில் வந்த ரிப்போர்ட், தலையில் இடியாய் வந்து இறங்கியது.. கடந்த 1982 ல் ஒரு மருத்துவமனையில் அல்யோன்யா பிறந்துள்ளார்..

 டிஎன்ஏ TEST

டிஎன்ஏ TEST

அதே மருத்துவமனையில் குல்சினியா என்ற பெண்ணும் பிறந்துள்ளார்.. இவர்கள் 2 பேரின் அடையாளத்தையும், அங்கிருந்த நர்ஸ்கள், தவறாக குறிப்பிட்டுவிட்டார்களாம்.. அதனால், குழந்தைகளும் மாறி போய்விட்டன.. இந்த விஷயம் அறிந்து அல்யோன்யா அதிர்ந்து போனார்.. இருந்தாலும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துவிட்டால், அனைத்தும் விளங்கும் என்பதால், அந்த டெஸ்ட்டையும் எடுத்தார்.. அதில், குழந்தை மாறி போனது உறுதியானது.. குல்சினியா பெற்றோருக்கு பிறந்த குழந்தை என்பதால்தான், தனக்கு ஆசிய முகம் வந்துள்ளதாக அல்யோன்யாவுக்கும் தெரியவந்துள்ளது..

நிஜத்தாய்

நிஜத்தாய்

இத்தனை ஆண்டுகள் கழித்து, அதாவது 40 வருடங்கள் கழித்து இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. நிஜமான தாய், தகப்பனை அல்யோன்யா இனி சந்திப்பாரா? அவர்களுடன் சேர்வாரா? என்று தெரியவில்லை.. இந்த சம்பவம் அங்கு அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தாலும், தகப்பனிடம் தாய் அனுபவித்து வந்த இன்னல்களுக்கான காரணத்தை கண்டுபிடித்த ஆறுதல் தென்பட்டுள்ளதாம் அல்யோன்யாவிடம்..!!

English summary
Innovative incident in Russia woman discovers didnt look like her dad and what happened next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X