For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவா, பைனாகுலரா... கண்களை விரிய வைக்கும் ஆச்சரிய பேர்ல் கத்தார் வரைபடம்!

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேர்ல் கத்தாரின் வரைபடத்தை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் விண்வெளியாளர் படம்பிடித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    கண்களை விரிய வைக்கும் ஆச்சரிய பேர்ல் கத்தார் வரைபடம்!

    தோஹா : மனிதர்களால் உருவாக்கப்பட்டு வரும் பேர்ல் கத்தாரின் வரைபடத்தை சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடம் வெளியிட்டுள்ளது. விண்வெளி பார்வையில் இந்த புகைப்படம் பார்ப்பதற்கு அப்படியே பைனாகுலர் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

    சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தின் விண்வெளியாளர் ஒருவர் கத்தார் தலைநகர் தோஹாவின் வரைபடத்தை படம் பிடித்துள்ளார். அரேபியன் பெனின்சுலாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பேர்ல் கத்தாரின் வரைபடமானது வியக்க வைப்பதாக இருக்கிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேர்ல் கத்தார் தனித்தீவு 1.5 சதுர கிலோமீட்டர்(0.6 சதுர மைல்கள்) கொண்டது. கத்தார் குடிமகன்கள் அல்லாத வெளிநாட்டவர் இந்தத் தீவின் உரிமையாளர்களாக இருக்கின்றனர்.

    International Space Station took this long lens photograph of part of Doha, pearl qatar man made island

    இந்தத் தீவுகளை இரண்டு ஆழமான கால்வாய்கள் பிரிக்கின்றன. பேர்ல் கத்தாரின் உள்கட்டமைப்பு இரண்டு முத்து மணிகளை கோர்த்தது போல அமைக்கப்பட்டிருக்கும். இந்த செயற்கை தீவை கட்டமைக்கும் பணிகள் 2014ம் ஆண்டில் தொடங்கியது, 2018ல் முடிவடையும் என்று நம்பப்படுகிறது. 10 எல்லைகள், 31 டவர் கட்டிடங்கள் மற்றும் 4,700 அடுக்குமாடி குடியிருப்புகள் இங்கு அமைக்கப்பட உள்ளன.

    2 மில்லியன் மக்கள் வசிக்கும் தோஹா பொருளாதார செயல்பாடுகளுக்கான மையப்புள்ளியாக இருக்கிறது. 2022 ஃபிபா உலகக் கோப்பை போட்டியை தோஹா தொகுத்து வழங்குகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் முதல் சாக்கர் போட்டி இது தான். அதிக மக்கள் தொகையை கொண்ட தோஹாவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான குடிநீரை வழங்குவது மிக சவாலான விஷயம்.

    கத்தார் பாலைவனத்தை ஒத்த வெப்ப நிலையில் வெப்பநிலையை கொண்டிருக்கும். மார்ச் முதல் செப்டம்பர் வரை இங்கு கோடைக்காலம், ஆண்டு மழையானது எப்போது இருக்கும் என்பதை கணிக்கவே முடியாது. தோஹாவின் நிலத்தடி நீர் எப்போதுமே அடிமட்டத்திலேயே இருக்கும், கிடைக்கும் கொஞ்ச நீரும் பாசனத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமே குடியிருப்பு வாசிகளுக்கு நீரை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    பேர்ல் கத்தாரின் கழுகுப் பார்வை போட்டோவை விண்வெளியாளர் அக்டோபர் 23,2017ல் நிகான் D5 டிஜிட்டல் காமிராவை பயன்படுத்தி 1600 மில்லிமீட்டர் லென்ஸ் பயன்படுத்தி எடுத்துள்ளார். எக்ஸ்பெடிஷன் 53 குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். பேர்ல் கத்தாரின் புகைப்படத்தை பார்க்கும் போது பைனாகுலர் போன்ற வடிவமைப்பிலேயே இருப்பது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

    English summary
    An astronaut flying aboard the International Space Station took this long lens photograph of a man made island Pearl-Qatar, which looks awesome look of binocular.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X