ஈராக் மீது 12 ராக்கெட்டுகளை ஏவிய ஈரான்.. அமெரிக்கா - ரஷ்யா மோதலால்.. வெடிக்கும் "பிராக்சி வார்"!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா போருக்கு இடையே ஈராக்கில் இருக்கும் அமெரிக்க துணைத் தூதரகம் அருகே ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. உலகம் முழுக்க proxy போரை இது ஏற்படுத்தும் சூழ்நிலையை உண்டாக்கி உள்ளது.

ஒரு இரண்டு நாடுகளுக்கு இடையில் நேரடியாக போர் நடக்கலாம், இரண்டு நாடுகள் வேறு சில சின்ன நாடுகளை வைத்து போர் செய்வதை proxy வார் என்று அழைப்பார்கள். உதாரணமாக இரண்டாம் உலகப்போர் சமயத்திலும், பனிப்போர் சமயத்திலும் உலக நாடுகள் பல்வேறு இடங்களில் சிறு சிறு proxy வார்களை நடத்தின.

முக்கியமாக பனிப்போர் சமயத்தில் ரஷ்யா அமெரிக்கா இடையே proxy வார் நடந்தது. தற்போது உக்ரைன் போர் கூட அமெரிக்கா ரஷ்யா இடையிலான நேரடி போராக இல்லாமல் மறைமுக proxy வார் போலவே நடந்து கொண்டு இருக்கிறது.

அணு ஆயுத ஒப்பந்தம்

அணு ஆயுத ஒப்பந்தம்

இந்த போர் காரணமாக தற்போது ஈரான் அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தி காரணமாக அந்த நாடு மீது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தது பலருக்கும் தெரியும். இதனால் அமெரிக்கா ஈரான் கடுமையான மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த 2015ல் ஈரான் அமெரிக்கா இடையில் அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

டீலிங் முடிய வேண்டிய தருணம்

டீலிங் முடிய வேண்டிய தருணம்

இதற்கான டீலிங் அப்போது உருவாக்கப்பட்டது. இதன்படி 97 சதவிகித ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அந்த நாடு கைவிட வேண்டும். புதிய அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள கூடாது என்று ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் வியன்னாவில் நடந்து வந்தது. இந்த மாதம் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்துயிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் மூலம் ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும்.

முட்டுக்கட்டை

முட்டுக்கட்டை

இதனால் ஈரானிடம் இருந்து அமெரிக்கா மீண்டும் எண்ணெய் வாங்கும். ஐரோப்பாவும் எண்ணெய் வாங்கும். இதன் மூலம் ரஷ்யாவின் எண்ணெயை நம்பி ஐரோப்பா இருக்க வேண்டியது இல்லை. ஏற்கனவே ரஷ்யாவின் எண்ணெயை அமெரிக்கா தடை செய்துவிட்டது. இந்த நிலையில்தான் ரஷ்யா மீதான பொருளாதார தடையால் ஈரானுடனான எங்களின் உறவு பாதிக்கிறது. அதனால் எங்கள் மீதான பொருளாதார தடையை நீக்கிவிட்டு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று ரஷ்யா கூறியது.

தாக்குதல்

தாக்குதல்

ரஷ்யாவின் இந்த அழுத்தம் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையிலான அணு ஆயுத டீலிங் முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு ஈரான் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால் ஈரான் ரஷ்யாவை மீறி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லை. இதனால் இந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை. இந்த நிலையில்தான் ஈராக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது.

 ஈரான் அட்டாக்

ஈரான் அட்டாக்

ஈராக்கின் மேற்கில் இருக்கும் ஈர்பில் என்ற நகரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் அமெரிக்கா துணை தூதரக மற்றும் விமான நிலையம் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 12 ஏவுகணைகள் ஏவப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை ஈரான்தான் நடத்தி இருக்கும் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. அதிலும் இங்கு இருக்கும் இஸ்ரேலின் சீக்ரெட் பேஸ்களை குறி வைத்து ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிராக்சி வார்

பிராக்சி வார்

இஸ்ரேல் - ஈரான் இடையே இருக்கும் மோதல் காரணமாக இந்த இடம் குறி வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா ஈரான் இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் பாதியில் நின்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈராக்கில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. ரஷ்யா - அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் சர்வதேச அளவில் பிராக்சி வார் போல வெடிக்கிறதோ என்று அச்சம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+