மாபெரும் போர் தொடங்கியது.. இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஏவிய ஈரான்.. சரமாரி அட்டாக்.. பரபரப்பு!
டமாஸ்கஸ்: இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்தியு நேரப்படி நேற்று இரவு இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதில் என ஈரான் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் பால்ஸ்தீன போர் தொடங்கி பல விஷயங்கள் இந்த மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலை அடையவில்லை. விரைவில் அவை இஸ்ரேல் மீது சென்று தாக்குதலை ஏற்படுத்தும். சில ஏவுகணைகள் தற்போதைக்கு இஸ்ரேலின் ராணுவ தளவாடங்களை தாக்கி லேசான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர்தான் இந்த ஈரான் தாக்குதலுக்கு காரணம். பாலஸ்தீனத்தை இஸ்ரேல் விடாமல் தாக்கி வந்தது ஈரான் விரும்பவில்லை. இந்த போர் பாலஸ்தீனத்திற்கு ஈரான் மறைமுகமாக உதவி வந்தது. இப்போது நேரடியாக இது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போராக மாறி உள்ளது.,
மோதலுக்கு காரணம்: அரபு நாடுகளில் இருந்த பல்வேறு ஆட்சிகள், மன்னர் ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டதை அரபு வசந்தம் என்று மேற்கு உலகம் அழைக்கும். மேற்கு உலகத்தின் அரசியலுக்கு இது ஆதரவாக இருந்ததால் அதை உலக நாடுகள் அரபு வசந்தம் என்று அழைக்கும். அந்த அரபு வசந்தம் ஒரு வகையில் மத்திய கிழக்கில் பல்வேறு போருக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில்தான் ரியல் அரபு வசந்தம் என்று சொல்லும் விதமாக இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக இஸ்லாமிய நாடுகள் ஒரு புள்ளியில் இணைய தொடங்கி உள்ளன. முக்கியமாக கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய மருத்துவமனை தாக்குதல் அந்த நாட்டிற்கே எதிராக திரும்பும் என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவினர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 800 பேர் வரை பலியாகினர்.
ஒன்று இணையும் அரபு நாடுகள்: இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று சேர தொடங்கி உள்ளன. சன்னி - ஷியா மோதல் காரணமாக பிரிந்து இருந்த சவுதி - ஈரான் கூட இஸ்ரேலை இந்த விவகாரத்தில் ஒன்றாக கண்டிக்க தொடங்கி உள்ளன. இஸ்ரேல் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
போர் உச்சம்: கடந்த சில மாதங்களாகவே இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் தற்போது நேரடியாக தலையிட்டு உள்ளது. இத்தனை காலம் மறைமுகமாக ஹெஸ்புல்லா இயக்கம் வழியாக ஈரான் இஸ்ரேலை தாக்கி வந்தது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ரகசியமாக ஈரான் படைகளை அனுப்பி போர் நடத்தி வந்தது. பக்கம் ஈரானின் நேரடி ஆதரவில் ஹெஸ்புல்லா இயக்கமும் இந்த போரில் களமிறங்கி இருந்தது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டு தாக்கி வந்தது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது/
பின்னணியில் ஈரான்: சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதால்.. இதற்கு பின் ஈரானும் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
முக்கியமாக இந்த படைக்கு பண நீதியாக, ஆயுத தளவாட ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக ஈரான் உதவி செய்வதாக கூறப்பட்டது. ஈரானின் இந்த செயல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை டென்ஷனுக்கு உள்ளாக்கியது. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் ஈரான் மறைமுகமாக தலையிட்டு வந்த நிலையில் ஈரான் தற்போது நேரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications