இந்தியாவுக்கு புது பிரச்சனை.. கத்தாரை விடாமல் தாக்கும் ஈரானால் தலைவலி.. போன் போட்ட மோடி.. பின்னணி
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலால் ஈரான் அந்த ஆலையை மூடியுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. கத்தாரை அடித்தால் இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரை ராணுவ தளம், கடற்படை தளம், விமான தளங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தாக்குதல்கள் தற்போது எண்ணெய் கிடங்குகள், கேஸ் ஆலைகளை நோக்கி நகர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இதுதான் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. இப்படியான சூழலில் இத்தகைய தாக்குதல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதல்களை முதலில் தொடங்கி வைத்தது இஸ்ரேல் தான். அந்த நாடு ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும் எல்பிஜி கேஸ் உற்பத்தி செய்யும் ஈரானின் தெற்கு புசேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் உள்ள தெற்கு பார்ஸ் எல்பிஜி வயல் மீது தாக்குதல் நடத்தியது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய எல்பிகே கேஸ் வயலாகும். ஈரானின் வருமானத்தை முடக்கும் வகையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
இதனால் கோபமடைந்த ஈரான், கத்தார், சவுதி அரேபியா உள்பட பிற நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள், கேஸ் ஆலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் ராஸ் லஃபான் எனும் தொழில்துறை நகர் அமைந்துள்ளது. அங்கு கத்தார் நாட்டுக்கு சொந்தமான உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி கேஸ் ஆலை உள்ளது. அதில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. 5ல் 4 ஏவுகணைகளை கத்தார் இடைமறித்து அழித்த நிலையில் ஒரு ஏவுகணை ஆலையை தாக்கிது. இதனால் ஆலை தீப்பற்றி எரிந்தது. தற்போது அங்கு கேஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை கத்தார் கடுமையாக கண்டித்துள்ளதோடு, தங்கள் நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைளை எடுக்க உள்ளதாக கத்தார் உள்ளது. இதனால் ஈரானுக்கும், கத்தாருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதற்கிடையே தான் பிரதமர் மோடி நேற்று கத்தார் அமீர் சேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது ரமலான் வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, கத்தாருடன் நிற்கிறோம். எரிசக்த சார்ந்த உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை கண்டிப்பதாக தெரிவித்த அவர் இந்தியர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்ததற்காக நன்றியும் தெரிவித்தார்.
இந்நிலையில் தான் கத்தாரை தாக்குவதால் இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? பிரதமர் மோடி ஏன் கத்தார் அமீருடன் தொலைபேசியில் அவசரஅவசரமாக பேசினார்? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது கத்தாரின் ராஸ் லஃபான் ஆலையில் ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக முதற்கட்டமாக கத்தாரின் எல்என்ஜி கேஸ் விநியோகத்தில் 20 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டையும் பாதிக்க உள்ளது.
இதனை சிறு புள்ளிவிவரம் வழியாக எளிதாக பார்க்கலாம். அதாவது எல்என்ஜி ஏற்றுமதியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக கத்தார் தான் 3வது இடத்தில் உள்ளது. கத்தார் ஆண்டுக்கு சுமார் 81 மில்லியன் டன் (81 Million Metric Tons) எல்என்ஜி கேஸை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இது உலகளாவிய எல்என்ஜி வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதமாகும்.
கத்தாரிடம் இருந்து நம் நாடும் அதிக பலன்களை பெறுகிறது. நம் நாட்டின் மொத்த எல்என்ஜி கேஸ் இறக்குமதியில் 40 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை கத்தார் தான் பூர்த்தி செய்கிறது. கடந்த 2024-25 நிதியாண்டில் கத்தார், நம் நாட்டுக்கு சுமார் 11.2 மில்லியன் டன் எல்என்ஜி ஏற்றுமதியை செய்தது. மேலும் கடந்த 2024ல் கத்தார் - நம் நாட்டுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று புதிதாக போடப்பட்டது. அதில் கத்தார், இந்தியாவிற்கு ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் எல்என்ஜியை அடுத்த 20 ஆண்டுகளுக்கு (2048 வரை) வழங்க ஒப்புக்கொண்டது.
கத்தாரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எல்என்ஜி கேஸ் நம் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உரம் தயாரிப்பு, மின் உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, நம்நாட்டில் தினசரி எல்என்ஜி பயன்பாடு 189 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர்ஸ் பர் டே (MMSCMD) ஆக உள்ளது. இதில் 97.5 MMSCMD உள்நாட்டிலேயே உற்பத்தியாகி உள்ளது. மீதமுள்ளவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஈரான் போரால் நம் நாட்டுக்கான எல்என்ஜி கேஸ் சப்ளை கடந்த வாரம், 47.4 MMSCMD அளவில் பாதிக்கப்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாட்டை நம் நாடு செய்துள்ளது. தற்போது கத்தார் மீதான ஈரானின் தாக்குதலால் நம் நாடு இன்னும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்கின்றனர் சர்வதேசய விவகாரங்களை அறிந்தவர்கள்.
-
அமைதிப் புறா பறக்கவில்லை! அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. அடுத்து என்ன! 4 ஆப்ஷன்கள் -
மொத்தமாக சொதப்பிய டிரம்ப்.. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்விக்கு இந்த 5 விஷயம்தான் காரணம்! -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியா-வில் செய்த வேலை.. முதல் ராணுவ ஆக்ஷன்! -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ரத்தகளறி! தங்கம் - பங்குகள் வீழ்ச்சி, எண்ணெய் உயர்வு? -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே -
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் 120 டாலரா? -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications