ஈரான் கொடூர ‘அட்டாக்’.. உலகிலேயே மிகப்பெரிய கத்தார் எல்என்ஜி கேஸ் ஆலையில் ஏவுகணை தாக்குதல்
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய எல்என்ஜி ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் எல்என்ஜி ஆலை வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள எல்என்ஜி ஆலை தான் உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி ஆலையாகும். இந்த ஆலை கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் ராஸ் லஃபான் எனும் தொழில்துறை நகரில் அமைந்துள்ளது. இந்த ஆலை மீது நேற்று ஈரான் கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரானில் இருந்து 5 ஏவுகணைகள் இந்த ஆலையை நோக்கி ஏவப்பட்டுள்ளது. அதில் 4 ஏவுகணைகள் இடைமறித்து கத்தார் அழித்தது. ஆனால் இன்னொரு ஏவுகணை எல்என்ஜி ஆலையின் வளாகத்தில் விழுந்தது. இதனால் ஆலை தீப்பற்றி எரிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் கூட ஆலையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் ஈரானுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இன்று அதிகாலையில் மீண்டும் ராஸ் லஃபான் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது கத்தார் - ஈரான் இடையேயான மோதல் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.












Click it and Unblock the Notifications