போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம்
தெஹ்ரான்: ஈரான் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று விடிய விடிய பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை தோல்விக்கு அமெரிக்கா ஒரு காரணத்தை சொல்லும் நிலையில் ஈரானும் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லியுள்ளது. ஈரான் கூறுகயில், போரால் முடியாததை எல்லாம் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் கேட்கிறது. இதனால் ஒத்துக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய முயன்றது. ஒரு வாரத்திற்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையே நேற்று விடிய விடிய 21 மணி நேரமாக இருநாட்டிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை தோல்வி ஏன்?
ஈரான் சார்பில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் தலைமையிலான குழுவும் அமெரிக்க சார்பில் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழுவும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. விடிய விடிய நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஈரான் - அமெரிக்கா போர் மேலும் தீவிரமாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது தொடர்பாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- ஈரானிய மக்கள் மற்றும் நாட்டின் நலனை பாதுகாக்க 21 மணி நேரமாக தீவிரமான மற்றும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈரான் பிரதிநிதிகள் ஈடுபட்டனர். ஈரான் பிரதிநிதிகள் பல்வேறு முன்னெடுப்புகளை வைத்த போதும், அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இதனால் பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளது.
வெறும் கையோடு திரும்பிய அமெரிக்கா
மேலும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "ஒரு அமர்வில் பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டிவிடும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளது. கானா நாட்டிற்கான ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாதது பற்றி கூறியுள்ளது. அதில், போரினால் அடைய முடியாத அனைத்தையும் பேச்சுவார்த்தையில் அடைய அமெரிக்கா நினைக்கிறது. அவர்கள் அனைத்தையும் கோரியுள்ளனர்.
ஈரான் முடியாது என்று சொல்லிவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தி மூடியே உள்ளது. வெறும் கையுடன் அமெரிக்க துணை அதிபர் நாடு திரும்புகிறார்" என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் இரண்டு போர்கப்பல்கள் கடந்ததாகவும், கடலில் ஈரான் வைத்து இருந்த கண்ணிவெடிகளை அகற்றும் நோக்கில் இந்த கப்பல்கள் சென்றதாகவும் கூறப்பட்டது. இதனை ஈரான் மறுத்துள்ளது.
ஜேடி வான்ஸ் பதில்
பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பிறகு, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியதாவது:- அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று ஈரான் முடிவு செய்துள்ளது. அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்ற நிபந்தனைகளையும் ஏற்க மறுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முயற்சிக்காது, அதனை பெற உதவும் கருவிகளைத் தேடமாட்டார்கள் என்பதற்கான உறுதிப்பாட்டை நாம் காண வேண்டும்" என்று கூறினார்.
முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், அடுத்த சுற்று வார்த்தை நடைபெறுமா? என்பதில் எந்த வித தெளிவும் இல்லை. அதேபோல, ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தி வைக்கப்படுமா? அல்லது அந்நாட்டின் மீது தாக்குதலை தீவிரப்படுத்த டிரம்ப் முடிவு செய்துள்ளாரா? என்பது சர்வதேச அளவில் பெரும் கேள்வியாக உள்ளது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications