Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, "இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியை ஈரான் மறுத்துள்ளது. "இந்திய கப்பல்கள் கடந்ததாக வரும் தகவல்கள் உண்மை இல்லை" என்று ஈரான் தரப்பு திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. இந்தியாவுக்காக மட்டும் பிரத்யேகமாக எந்தச் சலுகையும் அல்லது அனுமதியும் அளிக்கப்படவில்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையில் உள்ள சுமார் 55 கி.மீ அகலமுள்ள ஒரு கடல் வழிப்பாதைதான் ஹார்முஸ் ஜலசந்தி தான் உலகெங்கிலும் கடலில் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 31 சதவீதம் (தினமும் 13 மில்லியன் பேரல்கள்) இந்தப் பாதை வழியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. சவுதி அரேபியா, ஈராக், குவைத் போன்ற நாடுகள் தங்கள் எண்ணெயை உலக நாடுகளுக்கு அனுப்ப இந்தப் பாதையையே பெரிதும் நம்பி இருக்கின்றன.

Iran denies reports that Indian ships

'ஈஸ்ட்-வெஸ்ட் பைப்லைன்'

ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே கடந்த 13 நாட்களாக மோதல் முற்றியுள்ள நிலையில், இந்தப் பாதையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஈரான் அனுமதி அளிக்கும் கப்பல்கள் மட்டுமே இந்தப் பாதையைக் கடக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய நிலையில் இதில் சவுதி அரேபியா மட்டும் தனது நாட்டின் ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு அதாவது வளைகுடா கடலில் இருந்து செங்கடலுக்கு பைப் லைன் போட்டு வைத்துள்ளது. 'ஈஸ்ட்-வெஸ்ட் பைப்லைன்' என்று அழைக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான குழாய் வழித்தடத்தை அமைத்துள்ளது.

1,200 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பைப் லைன்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அவ்வப்போது ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவே சவுதி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறது. சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள பாரசீக வளைகுடா பகுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து சவுதி நிலப்பரப்பின் குறுக்கே சுமார் 1,200 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, மேற்கே உள்ள செங்கடல் துறைமுகமான யான்பு நகரை அடைகிறது.

சவுதி மட்டும் விதிவிலக்கு

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால், சவுதியின் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலும் நின்றுவிடும். ஆனால் இந்த பைப்லைன் இருந்தால், ஹார்முஸ் ஜலசந்திக்குச் செல்லாமலேயே செங்கடல் வழியாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு எண்ணெயை அனுப்ப முடியும். ஆனால் பைப்லைன் வழியாக மற்ற நாடுகளால் அனுப்ப முடியாது. இதுதான் தற்போது சிக்கலுக்கு காரணமாக உள்ளது.

ஈரான் அனுமதி தந்ததா

ஆனால் இன்று காலை முதலே ஊடகங்களில் செய்தி ஒன்று வெளியானது. அதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, "இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது" என்று செய்திகள் பரவின.

இந்திய கப்பல்கள் கடக்கவில்லையா

குறிப்பாக, 'புஷ்பக்' மற்றும் 'பரிமல்' ஆகிய இரண்டு இந்தியக் கப்பல்கள் இந்தப் பாதையைக் கடந்துவிட்டதாகவும், இந்திய மாலுமி ஒருவரால் வழிநடத்தப்பட்ட மற்றொரு கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்துவிட்டதாகவும் தகவல்கள் நாடு முழுவதும் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

ஈரான் விளக்கம்

இந்தச் செய்திகள் குறித்து ஈரானிடம் ராய்டர்ஸ் மற்றும் என்டிடிவி ஆகியவை சார்பில் கேட்கப்பட்டபோது, டெஹ்ரானில் உள்ள உயர்மட்ட ஆதாரங்கள் இந்தத் தகவலை மறுத்துள்ளனவாம். "இந்தத் தகவல்கள் உண்மை இல்லை" என்று ஈரான் தரப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டதாம். அதாவது, இந்தியாவுக்காக மட்டும் பிரத்யேகமாக எந்தச் சலுகையும் அல்லது அனுமதியும் அளிக்கப்படவில்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தி உள்ளதாம்
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கப்பல்களுக்குப் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இப்போதும் தொடர்கின்றன.

ஸ்பெஷல் அனுமதி இல்லை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களுக்கு ஆதரவாக இல்லாத கப்பல்கள் மட்டுமே இந்தப் பாதையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. தங்களின் அனுமதி பெறாத கப்பல்கள் ஈரான் ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்றும் எச்சரித்திருக்கிறது. தெளிவாக சொல்வது என்றால், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் 'ஸ்பெஷல்' அனுமதி வழங்கப்பட்டதாக வந்த செய்தியை ஈரான் "தவறானது" என்று மறுத்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.எனினும் அதிகாரப்பூர்வமாக ஈரான் இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை.. ஈரான் அரசு வட்டாரங்கள் கூறியதாகவே ஆங்கில ஊடங்கள் கூறியுள்ளன.

இதனிடையே இந்திய கப்பல்கள் ஈரானின் ஹாமுஸ் எல்லையை கடந்தே வந்ததாகவும், அதற்காக கொடியைமாற்றிக்கட்டி, லாவகமாக வந்ததாகவும், விளக்குகளை அணைத்துவிட்டு சாமார்த்தியமாகவும் வந்ததாகவம் தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+