"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி
பாகு: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி உள்ளது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று நம் நாட்டுடன் மோதி வரும் அஜர்பைஜான் மீது ஈரான் தனது அதிநவீன ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தி அதிரடி காட்டி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
போரை தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது நேரடியாக ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் ஈரான் தாக்கி வருகிறது.

மறுபுறம் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள அரபு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த அரபு நாடுகளில் அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ளதால் ஈரான் இந்த தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு முழுவதுமே தற்போது பதற்றத்துடன் காணப்படுகிறது.
அஜர்பைஜான் மீது தாக்குதல்
இப்படியான சூழலில் தான் இன்று திடீரென்று ஈரான் தனது அண்டை நாடான அஜர்பைஜான் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானில் இருந்து பறந்து சென்ற 2 ட்ரோன்கள் அஜர்பைஜான் நாட்டை தாக்கியது. இதில் ஒரு ட்ரோன் அஜர்பைஜானன் நக்கிச்செவன் விமான நிலையத்தின் டெர்மினல் கட்டடத்தில் மீது விழுந்தது. இன்னொரு ட்ரோன் செகெராபாத்தில் உள்ள பள்ளிக்கட்டடம் மீது விழுந்தது.
தூதரை அழைத்து கண்டிப்பு
ட்ரோன்கள் நடத்திய இந்த தாக்குதலில் தீப்பிழம்புகள் எழுந்தன. இதில் 2 பேர் காயமடைந்தன. இந்த தாக்குதலால் அஜர்பைஜான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. ஈரானை கண்டித்துள்ளது. தாக்குதல் நடந்த உடன் அஜர்பைஜானுக்கான ஈரானை தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளதோடு, கண்டித்தது.
தாக்குதலின் பின்னணி
இதுவரை அரபு நாடுகளை குறிவைத்து தாக்கிய ஈரான் திடீரென்று அஜர்பைஜானை குறிவைத்து தாக்கியது ஏன்? என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது அஜர்பைஜானை எடுத்து கொண்டால் அது இஸ்ரேலுடன் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது.
வார்னிங்கிற்காக தாக்குதல்
இஸ்ரேலிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை வாங்கி வருகிறது இந்த உறவை பயன்படுத்தி அஜர்பைஜானில் இருந்து இஸ்ரேல் தாக்க அனுமதி கோர வாய்ப்புள்ளது. இதற்கு அஜர்பைஜான் அனுமதி கொடுத்தால் அது ஈரானுக்கு பின்னடைவாக மாறும்.
இதனால் தான் வார்னிங் செய்யும் வகையில் ஈரான், அஜர்பைஜான் மீது டிரோன் தாக்குதலை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டு ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது அஜர்பைஜான் சார்பில்ஈரான் மீதான தாக்குதலுக்கு தங்களின் நிலத்தை வழங்கமாட்டோம் என்று அந்த நாடு அறிவித்து இருந்தது. ஆனால் இந்த முறை இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்த நிலையில் ஈரான், அஜர்பைஜானை தாக்கி உள்ளது.
இந்தியாவின் எதிரி
மேலும் இந்த அஜர்பைஜான் நமக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றது. இதற்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் வழியாக உரிய முறையில் பதிலடி கொடுத்தது. இந்த பதிலடியை அஜர்பைஜான் கண்டித்து நமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications