மத்திய கிழக்கில் விரிவடையும் போர்.. ஆயுதங்களை இறக்கிய இஸ்ரேல்! ஈரான் பகிரங்க எச்சரிக்கை
தெஹ்ரான்: லெபனானில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதல், ஹிஸ்புல்லாவை அடிபணிய வைக்காது என்று ஈரான் கூறியுள்ளது. எனவே மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், இதற்கு அந்நாடு பதிலடி கொடுப்பதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில், 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடுத்தது. இதில் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல்தான் தற்போது நடக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன போருக்கான தொடக்கப்புள்ளி.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தீவிர போரை அறிவித்தது இஸ்ரேல். இந்த போரில் இது வரை 41,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், சுகாதார பாதிப்புகளும் பாலஸ்தீன மக்களை துரத்திக்கொண்டிருக்கிறது.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தினால், அண்டை இஸ்லாமிய நாடுகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. குறிப்பாக லெபனானிலிருந்து இயங்கி வரும் ஹில்புல்லா அமைப்பு, இந்த போரின் போக்கையே மாற்றும் அளவுக்கு தலையீடு செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஒரு கட்டத்தில் ஹமாஸை கூட சமாளித்துவிடலாம் போல.. ஆனால் ஹிஸ்புல்லாவை சமாளிப்பது தலைவலியாக இருக்கிறது என்பதை இஸ்ரேல் உணர்ந்துக்கொண்டது.
எனவே, என்ன செய்வது என்று யோசித்து வந்த இஸ்ரேல் தற்போது பேஜர் தாக்குதலை நடத்தியிருக்கிறது. நவீன டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்திலும், ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களைதான் தற்போதுவரை பயன்படுத்தி வருகிறார்கள். காரணம், இதனை ஹேக் செய்ய முடியாது. செல்போனை ஹேக் செய்து, இருப்பிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பேஜரில் அப்படி செய்ய முடியாது. இருப்பினும் இந்த பேஜரை மொத்தமாக கொள்முதல் செய்த இடத்தில் சில தில்லு முல்லு வேலைகள் நடந்திருக்கின்றன.
இந்த பேஜர்கள் ஹங்கேரியில்தான் அசெம்பிள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி செய்யும்போது வெடிபொருட்கள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து செப்.19ம் தேதி இஸ்ரேல் இதை வெடிக்க செய்திருக்கிறது. பேஜர் மட்டுமல்லாது வாக்கி டாக்கி, செல்போன், சோலார் பேனலுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி என அனைத்தும் வெடித்து சிதறியுள்ளன. இந்த தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லா மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் அதிகாரப்பூர்வ போரை தொடங்கியுள்ளது. வான்வழியாக நடத்தப்பட்ட தாக்குதலில், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 50 பேர் என மொத்தமாக 569 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஹிஸ்புல்லா தளபதி இப்ராஹிம் முகமது கோபிசி' கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹிஸ்புல்லாவும் தளபதியின் மரணத்தை உறுதி செய்திருக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி, "இஸ்ரேலின் தாக்குதல் ஹிஸ்புல்லாவை அடிபணிய வைக்காது" என்று கூறியுள்ளார். மேலும் "ஹிஸ்புல்லா அதிக அளவில் படை பலத்தை கொண்டிருக்கிறது. ஒரே ஒரு தளபதியை மட்டும் கொன்றுவிடுவதன் மூலம் இந்த இயக்கத்தின் செயற்பாடுகளை நிறுத்திவிட முடியாது. பாலஸ்தீனிய மற்றும் லெபனான் எதிர்ப்பிற்கு இறுதி வெற்றி கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
கமேனியின் இந்த கருத்து, இனி வரும் நாட்களில் மத்திய கிழக்கு இன்னும் பதற்றமாக இருக்கும் என்பதை உணர்த்துவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications