முதல் முறையாக கத்தாரில் காதர் ஏவுகணைகளை வீசிய ஈரான்.. அது எந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது?
தோஹா: தனது நட்பு நாடு என்று கூட பார்க்காமல் ஈரான், கத்தாரில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை முதல் முறையாக வீசியிருக்கிறது. மொத்தம் ஆறு ஏவுகணைகளை அமெரிக்காவின் விமானப்படை தளத்தை குறிவைத்து ஈரான் வீசியது. இதில் யாருமே காயம் அடையவில்லை என்றும், எந்த பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனிடையே ஈரான் வீசிய காதர் பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது.. அதன் பலம் பற்றி பார்ப்போம்
ஈரானால் "காதர்" என்று அழைக்கப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை நடுத்தர இலக்குகளை குறிவைத்து தாக்க பயன்படுத்தப்படுகிறது.' காதர்-110 என்ற ஏவுகணையை அதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம். இந்த ஏவுகணைகள் ஷஹாப்-3 ஏவுகணையின் தொடர்ச்சி அல்லது அதன் வழித்தோன்றல் என்று கூறலாம். ஈரானின் மற்ற ஏவுகணைகளை ஒப்பிடும் போது, அதிக அளவில் தந்திரமாக செயல்படும். மிக குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிவிடும் வல்லமை உடையது. மேலும் காதர் ஏவுகணைகள் திரவ எரிபொருளால் இயக்கப்படுகிது. இது ஒரே சமயத்தில் 650 கிலோ முதல் 1000 கிலோ வரை எடையுள்ள வெடிமருந்துகளை ஏற்றி செல்லும் வல்லமை உடையவை ஆகும்.

ஈரானின் வலிமையான ஏவுகணையான காதர்-110, 1,950 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் வலிமை உடையதாகும். இது பாலிஸ்டிக் ஏவுகணை என்பதால் இரசாயனம் அல்லது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுக்கு இந்த ஏவுகணைகளை மாற்றியமைக்க முடியும். ஷஹாப்-3 என்ற ஈரானின் பிற ஏவுணகளை ஒப்பிடும் போது, வெறும் 30 நிமிடத்தில் இலக்கை தாக்கிவிடும். ஈரான் கடந்த 2004 முதல் காதர் ஏவுகணைத் தொடரை உருவாக்கி வருகிறது. 330 கிமீ இலக்கில் தாக்கும் வல்லமை உடைய கப்பல் எதிர்ப்பு கப்பல் ஏவுகணையும் உள்ளது.
ஈரான் நேற்று இரவு நடத்திய ஏவுகணை தாக்குதலையடுத்து கத்தார், பஹ்ரைன், எகிப்து, குவைத், ஈராக் மற்றும் சவுதி அரேபியா தங்களது வான்வெளியை மூடியிருக்கின்றன. அண்டை நாடான பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், "பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட கத்தார் நாடு செய்துள்ள அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் இன்று நடந்த தாக்குதலை பொறுத்தவரை எந்த அமெரிக்கர்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதைத் தவிர, மிக முக்கியமாக, எந்த கத்தார் மக்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்று கூறியுள்ளார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications