அந்த இடத்தில் சிக்கிய வாட்டர்பாட்டில்.. மனைவிக்கு பயந்து டாக்டரிடம் உண்மையை மறைத்த கணவர்!
ஈரானில் ஆசனவாயில் சிக்கிய வாட்டர்பாட்டிலை சாமர்த்தியமாக வெளியில் எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
தெஹ்ரான்: மனைவிக்கு பயந்து கொண்டு, ஆசனவாயில் வாட்டர்பாட்டில் மாட்டிக் கொண்டதை வெளியில் சொல்லாமல் 50 வயது முதியவர் மறைத்த சம்பவம் ஈரானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'என் மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாப்பா..' என சில கணவர்கள் மனைவிக்கு பயந்து கொண்டு சில செயல்களைத் தவிர்ப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஒரு சிலர் திருட்டுத்தனமாக மனைவிக்கு பிடிக்காததைச் செய்துவிட்டால், முடிந்தவரை அது மனைவியின் காதுக்குப் போகாதவாறு பார்த்துக் கொள்வார்கள். ஆனால், ஈரானிலோ ஒரு கணவர் தன் மனைவிக்குப் பயந்து தன் ஆசனவாயில் வாட்டர்பாட்டில் இருந்ததையே மறைத்துள்ளார் ஒரு கணவர்.
இரண்டு மூன்று நாட்களாகத் தனது கணவர் சரியாகச் சாப்பிட முடியாமல், மலம் கழிக்க முடியாமல் அவதிப்படுவதைப் பார்த்து, அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் அந்த மனைவி.

ஸ்கேன்
அப்போதும் நடந்தது என்ன என்பதை மருத்துவரிடமோ அல்லது தன் மனைவியிடமோ அந்தக் கணவர் கூறவில்லை. மருத்துவரிடம் சரியாக மலம் கழிக்க இயலவில்லை, பசிக்கவில்லை என்று மட்டும் திரும்பத் திரும்ப அவர் கூறியிருக்கிறார். எனவே, அந்தக் கணவரின் உடலில் என்ன பிரச்சினை எனத் தெரிந்து கொள்வதாக, அவரது வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர் மருத்துவர்கள்.

வாட்டர்பாட்டில்
அப்போது அவரது ஆசனவாயில் வாட்டர்பாட்டில் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 250 மிலி நீரை நிரப்பும் 19 செமீ நீளம் இருந்த அந்த பாட்டில் எப்படி ஆசனவாயில் சிக்கியது என்பதை, கையும் களவுமாக மாட்டியபிறகும், அந்தக் கணவர் கூற மறுத்துள்ளார். அவருக்கு தன் ஆசனவாயில் வாட்டர்பாட்டில் இருப்பது தெரிந்தும், அதைத் தன் மனைவியிடம் கூறினால் அவர் நிச்சயம் திட்டுவார் என அவரிடம் மறைத்து வந்துள்ளார்.

மருத்துவக் கண்காணிப்பு
பின்னர் ஒருவழியாக அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே, ஆசனவாய் வழியாகவே மருத்துவர்கள் அந்த வாட்டர்பாட்டிலை வெளியில் எடுத்து விட்டனர். நல்லவேளையாக ஆசனவாய் வழியாக குடலில் சிக்கியிருந்த அந்த வாட்டர்பாட்டிலால் அவரது உடலுக்கு வேறு எந்த ஆபத்தான பிரச்சினையும் ஏற்படவில்லை. மூன்று நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைத்து விட்டு அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டனர் மருத்துவர்கள்.

மனநல சிகிச்சை
அந்த வாட்டர்பாட்டிலை சம்பந்தப்பட்ட நபரே உள்ளே செலுத்தியிருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கணிப்பு. சிலர் பாலியல் திருப்திக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த நபர் அதுபோன்ற காரணங்களுக்காக அப்படிச் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் மனநலப் பிரச்சினையா என்பது தெரியவில்லை. எனினும் அவருக்கு மனநல சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
-
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications