Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

60% செறிவூட்டப்பட்ட 400 கிலோ யுரேனியம்! ஈரானின் அடுத்த திட்டம் என்ன? உற்று நோக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் யுரேனிய இருப்பு அழிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியெனில் 60% வரை செறிவூட்டப்பட்ட சுமார் 400 கிலோ யுரேனியத்தை வைத்து ஈரான் என்ன செய்யும்? அதன் திட்டம் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன. நிபுணர்கள் இதைப்பற்றி விளக்கமளித்துள்ளனர்.

ஜூன் 13ம் தேதி தொடங்கி ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என மூன்று அணு ஆய்வு மையங்கள் மீதும் இஸ்ரேல்+அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருந்தது. இந்த தாக்குதலில் ஆய்வு மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்கா சொன்னாலும் அதற்கான நம்பகமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

Iran uranium nuclear

வெளியான ஆதாரங்கள்

மறுபுறம் ஈரான் சுமார் 400 கிலோ வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருந்ததாக சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) கூறியிருந்தது. இது எங்கே? ஒருவேளை அமெரிக்காவின் தாக்குதலில் இது அழிக்கப்பட்டிருந்தால் இதிலிருந்து நிச்சயம் அணு கதிர் வீச்சு வெளிப்பட்டிருக்கும். அப்படி ஏதும் வந்தது மாதிரி தெரியவில்லை. அதேபோல மேக்சர் செயற்கைக்கோள் புகைப்படங்கள், சில நாட்களுக்கு முன்னரே இந்த யுரேனியம் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டிருந்தது.

யுரேனியம் எங்கே?

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது அமெரிக்கா, ஈரானின் யுரேனியத்தை அழிக்கவில்லை என்று உறுதியாக சொல்ல முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அணு ஆயுதம் தயாரிக்க இந்த யுரேனியம் முக்கியம். அப்படியெனில் அது எங்கே போனது?

ஈரான் நிறைவேற்றிய மசோதா

ஒருவேளை அது பத்திரமாக இருக்கிறது எனில், ஈரான் நிச்சயம் அணு ஆயுதங்களை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி நடந்தால் இஸ்ரேலும், அமெரிக்காவும்தான் இதற்கான முக்கிய காரணம். தற்போதைய நிலவரப்படி, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க தேவையான தொழில்நுட்ப அறிவையும் பொருட்களையும் பெற்றுள்ளது. போதாத குறைக்கு IAEA-விலிருந்து வெளியேறுவதாகவும் ஈரான் அறிவித்திருக்கிறது. சமீபத்தில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அணு குண்டு நோக்கி நகரும் கிழக்காசியா

இது, 'அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து' (NPT) விலகுவதற்கான தொடக்கம். வடகொரியா இதிலிருந்து விலகியபோது கிழக்காசிய நாடுகள் என்ன நிலைமைக்கு தள்ளப்பட்டன என்பதை நாம் ஒருமுறை யோசித்து பார்க்க வேண்டும். கடந்த 2003ம் ஆண்டு வடகொரியா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது. அதன் பின்னர் அணு ஆயுதங்களை உருவாக்கி அடுக்கி வைத்திருக்கிறது. இதனால், ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் NPT ஒப்பந்தத்திலிருந்து விலக ஆர்வம் காட்டி வருகின்றன.

அணு குண்டை உருவாக்கும் ஜப்பான்

தென்கொரியாவில் சுமார் 70% மக்கள் தங்கள் நாட்டுக்கு என சொந்தமாக அணு ஆயுதம் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஜப்பான் அப்படி வெளிப்படையாக கோரவில்லை. ஏற்கெனவே அணு குண்டால் பாதிக்கப்பட்டிருப்பதால் அணு குண்டை வைத்திருக்க மாட்டோம், உருவாக்க மாட்டோம், பயன்படுத்த மாட்டோம் என்கிற கொள்கையை அந்நாட்டு அரசு பின்பற்றி வருகிறது. இருப்பினும், தென்கொரியாவின் அணு ஆயுத வளர்ச்சி, ஜப்பானை சொந்தமாக அணு குண்டை உருவாக்கும் நிலைக்கு தள்ள வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்காவே காரணம்

இப்போது ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கிறது எனில், சவுதி அரேபியா மற்றும் துருக்கி அணு ஆயுதங்களை உருவாக்க தொடங்கும். இது ஒரு சங்கிலி தொடர் போல உலகம் முழுவதும் பாதிக்கும்.

ஆக தற்போதைய நிலவரப்படி தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பேரம் பேச பயன்படுத்தும். அமெரிக்காவோ, இஸ்ரேலோ இன்னும் ஓரடி முன்வைக்கும்போது ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும். இதற்கு முழு காரணமாக அமெரிக்கா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+