நெருங்கும் அமெரிக்க போர்க்கப்பல்.. ஈரான் போட்ட பெரிய பிளான்! சிலந்தி வலையில் சிக்கும் டிரம்ப்?
தெஹ்ரான்: ஈரானை நோக்கி, அமெரிக்க கடற்படையின் மிகவும் பிரமாண்டமான, சக்தி வாய்ந்த போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நகர்ந்து வருகிறது. இது ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஈரான் மிக முக்கியமான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
ஈரான் இப்போது 80,000 ஷஹேத் ட்ரோன்களை போருக்குத் தயாராக வைத்திருப்பதாகவும், தினமும் 400 ட்ரோன்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரோன் உற்பத்தியை அதிகரிக்க ரஷ்யா உதவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார சுமை
ஈரான் வசம் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் இதுவும் ஒன்று. இந்த ட்ரோன்கள் மிகவும் மலிவானவை. ஒரு ட்ரோனின் விலை சுமார் ₹17 - ₹42 லட்சம் மட்டுமே. ஆனால், இதைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் விலை பல கோடியை தொடும். அதாவது, ₹50 லட்சம் மதிப்பிலான ட்ரோனை அழிக்க ₹20 கோடி செலவு செய்வது எதிரி நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்.
இலக்கை தாக்கும்
ஒரே நேரத்தில் 5 முதல் 10 ட்ரோன்களை ஒரு லாரியில் இருந்து ஏவ முடியும். நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஒரே நேரத்தில் ஏவும்போது, எதிரி நாட்டின் ராடார்களாலும் வான் பாதுகாப்பு அமைப்புகளாலும் அனைத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. சில ட்ரோன்கள் சுடப்பட்டாலும், மீதமுள்ளவை இலக்கைத் துல்லியமாகத் தாக்கிவிடும்.
ட்ரோன்களின் பலம்
இந்த வகை ட்ரோன்கள் அளவில் சிறியவை. எளிதில் ரேடாரில் சிக்காது. காரணம் இது கார்பன் இழைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவை தரையிலிருந்து மிகவும் தாழ்வாக பறப்பதால், திடீரென மலைக்கு பின்னால் இருந்தும், கட்டிடங்களுக்கு பின்னால் இருந்தும் தாக்கக்கூடும். இவை சாதாரண ட்ரோன்கள் போலத் தாக்கிவிட்டுத் திரும்பி வராது. இவை பறக்கும் ஏவுகணை போன்றது. இலக்கைக் கண்டறிந்ததும் அதன் மேல் மோதி வெடித்துச் சிதறிவிடும். 30 முதல் 50 கிலோ வரை வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.
400 ட்ரோன்கள்
மணிக்கு 185 கி.மீ வேகத்தில் 2,500 கி.மீ வரை இந்த ட்ரோன்கள் பயணிக்கும். தற்போது இந்த ட்ரோன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டிருக்கிறது. ட்ரோன் தயாரிப்பில் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்து வருகிறது. இந்த உதவி மூலம் தினமும் 400 ட்ரோன்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மொத்தமாக ஈரானிடம் 80,000 ட்ரோன்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஆதாரம் இன்னும் வெளியாகவில்லை.
அமெரிக்காவுக்கு சிக்கல்
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பல் என்பது, சுமார் 1 லட்சம் டன் எடை கொண்ட ஒரு இரும்பு கோட்டை. இதை தாக்கிய அழிக்க ஷஹேத் ட்ரோன்களால் முடியாது. ஆனால், நிச்சயம் கடுமையான சேதங்களை ஏற்படுத்த முடியும். இந்த கப்பலில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் இருக்கின்றன. இவை ஒரே நேரத்தில் சில 100 ட்ரோன்களை மட்டுமே குறி பார்க்கும். எனவே, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் ஏவப்படும்போது கப்பல் கடுமையான பாதிப்பை எதிர்க்கொள்ளும்.
ஈரான் தினந்தோறும் 400 ட்ரோன்களை உருவாக்கிருகிறது என்பது, அமெரிக்காவுக்கு நிச்சயமாக சிக்கல்தான். எனவே தற்போது அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்.. குறிப்பாக ஈரானை நோக்கி போர்க்கப்பல்களை அனுப்புவது என்பது, சிலந்தி வலையில் சிக்குவதை போன்றது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம் -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்!












Click it and Unblock the Notifications