பாட்டனுக்கெல்லாம் பாட்டன் ஃபத்தா 1.. ஈரான் கையில் ’இரும்பு’ அரக்கன்! 10 நாள் கூட தாங்காது இஸ்ரேல்!
டெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையே போர் தீவிரமாகி இருக்கும் நிலையில் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என ஈரான் உயர்தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க இஸ்ரேல் மீது ஈரான் ஃபத்தா 1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. வெறும் ஏழு நிமிடங்களில் இஸ்ரேலை தாக்கும் திறன் உடையது இந்த ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்ததாக கூறி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது ஏவுகணைகள், அதிநவீன ட்ரோன்கள் மூலம் கடுமையாக தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
தங்கள் மீது தாக்குதல் நடத்தி ஈரான் தவறு செய்து விட்டதாகவும், பதிலடி மிக கடுமையாக இருக்கும் என கூறிய இஸ்ரேல் நேற்று ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகள், அதிநவீன ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் டொனால்ட் டிரம்பைக் கொல்ல ஈரான் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வந்த நிலையில்., ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சரணடைய வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆனால் ட்ரம்புக்கு சவால் விட்டிருக்கிறார் அயத்துல்லா அலி கமேனி. அபத்தமான அச்சுறுத்தலுக்கு பயப்படுபவர்கள் தான் பயப்படுவார்கள். எங்களிடம் அது எடுபடாது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஈரான் அடிபணியாது. யார் தாக்குதல் நடத்தினாலும் அடிபணிய மாட்டோம்.
இந்த தாக்குதலில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டால் ஈரானை விட அதிக சேதத்தை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அது ஈடு செய்ய முடியாதபடி இருக்கும் என அயத்துல்லா அலி கமேனி கூறி இருக்கிறார். இந்த நிலையில் ஈரான் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தாங்கள் தான் வெற்றி பெற்றோம் என இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால் அதன் வான் பாதுகாப்பு கவசங்களில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
அயன் டோம், தாட், ஏரோ போன்ற வான் பாதுகாப்பு கவசங்கள் அந்நாட்டின் வசம் இருந்தாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிகபட்சம் இன்னும் 10 முதல் 12 நாட்கள் தான் இஸ்ரேலால் வான் பாதுகாப்பு பாதுகாப்பை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலை அதிர வைத்திருக்கிறது ஈரான். முதன்முதலாக நேற்று முன்தினம் இரவு ஈரான் இஸ்ரேல் மீது ஃபத்தா 1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கியது.
இதில் இஸ்ரேலின் அயன் டோம் உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணிக்கும் இந்த ஹைப்பர்சோனிக் ஃபத்தா 1 ஏவுகணையின் சில சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்..
உலக அளவில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளே ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வைத்திருக்கும் நிலையில் இந்தியா பிரம்மோஸ் 2 ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்து மட்டுமே இருக்கிறது. அது இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் உலக அளவில் கவனம் பெற்று இருக்கிறது ஃபத்தா 1. ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையான இது மணிக்கு 15,000 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இலக்கை தாக்கும். சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. 200 முதல் 450 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கொண்டு செல்லும். ஈரான் சொல்லும் கணக்குப்படி வெறும் ஏழு நிமிடங்களில் இஸ்ரேலை தாக்கும் வல்லமை கொண்டது ஃபத்தா 1 ஹைப்பர்சோனிக்.
குறிப்பாக இதன் சிறப்பு அம்சம் வான் கவச ஏவுகணைகளை சமாளிக்கும் வகையில் திசையை திடீரென மாற்றி, அதாவது மேலிருந்து கீழும், இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும், குறுக்கே குறுக்கே பாய்ந்து சென்று தன்னுடைய இலக்கை வெற்றிகரமாக தாக்கும் தன்மை கொண்டது ஃபத்தா 1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல்












Click it and Unblock the Notifications