அமெரிக்காவுக்கு ஈரான் போட்ட 3 கண்டிஷன்கள்! கோபத்தில் உச்சத்திற்கு போன டிரம்ப்! திக் திக் உலக நாடுகள்
தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் இதுவரை நிரந்தர போர் நிறுத்தம் வரவில்லை.. இரு தரப்பு பேச்சுவார்த்தையும் கூட தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.. இதற்கிடையே அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் அதிரடியாக 3 கண்டிஷன்களை விதித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, சுமார் இரண்டு மாதங்களை எட்டியுள்ள மத்திய கிழக்கு போர்ச் சூழலில், அமைதியை நிலைநாட்டப் பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் மீண்டும் எங்குப் போர் வெடிக்குமோ என்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் ஒரு 3-Stage பார்முலாவை முன்வைத்துள்ளது.

3 கண்டிஷன்கள்
அதாவது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் சில கண்டிஷன்களை முன்வைத்துள்ளது.
Stage 1 - போர் நிறுத்தம்.. ஈரான் மற்றும் லெபனான் மீதான போரை முழுமையாக நிறுத்த வேண்டும். மீண்டும் போர் ஏற்படாது என்பதற்கான கான்கிரீட் உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்க வேண்டும்.
Stage 2 - ஹார்முஸ் ஜலசந்தி.. முதல் நிலை ஏற்கப்பட்டால் மட்டுமே, சர்வதேச எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்படும்.
Stage 3- அணுசக்தி விவகாரம்.. மேற்கூறிய இரண்டு நிலைகளும் வெற்றிகரமாகக் கடந்த பின்னரே, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் யுரேனியம் செறிவூட்டல் குறித்துப் பேசப்படும்.
அமெரிக்கா பதிலடி
இருப்பினும், இதை அமெரிக்கா ஏற்பதாகத் தெரியவில்லை.. ஈரானின் இந்த அதிரடி முன்மொழிவுக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ், "பத்திரிகைகள் வாயிலாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அதிபர் டிரம்ப் கூறியது போல, அமெரிக்கா தான் இந்த பேச்சுவார்த்தை போக்கைத் தீர்மானிக்கிறது. அமெரிக்க மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்; ஈரானை ஒருபோதும் அணு ஆயுதம் ஏந்த அனுமதிக்க மாட்டோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
பாகிஸ்தானில் நடந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச மறுத்துவிட்டார். இதனால் அதிருப்தியடைந்த அதிபர் டிரம்ப், "இனி எங்களது தூதர்கள் 18 மணிநேரம் விமானத்தில் பறக்க வேண்டிய அவசியமில்லை.. இனி எதுவாக இருந்தாலும் ஒரு போன் காலிலேயே பேசி முடிக்கலாம்" எனத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரானிய அமைச்சர் அரக்சி தற்போது ஓமன் மற்றும் பாகிஸ்தான் பயணத்தை முடித்துவிட்டு ரஷ்யாவுக்கு விரைந்துள்ளார். அங்கு அவர் அதிபர் புதினைச் சந்தித்துப் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க உள்ளார். அதே நேரத்தில், டிரம்ப் இன்று (திங்கட்கிழமை) தனது தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை குழுவினருடன் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட உள்ளார்.
அடுத்து என்ன
கடந்த ஏப்ரல் 11-12 தேதிகளில் நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தையே முட்டுக்கட்டையில் முடிந்த நிலையில், தற்போது ஈரான் வைத்துள்ள நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. குறிப்பாக, அமெரிக்கா முக்கியமாக எதிர்பார்க்கும் அணுசக்தி விவகாரத்தைக் கடைசி ஸ்டேஜிற்கு ஈரான் தள்ளியுள்ளது. இதனால் அமெரிக்கா இதை ஏற்க வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே சொல்லப்படுகிறது.
மத்திய கிழக்கில் தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், நிரந்தரத் தீர்வு என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. டிரம்ப் - புதின் - ஈரான் என இந்த முக்கோண ஆட்டத்தில் அடுத்த மூவ் யாருடையது என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பு!














Click it and Unblock the Notifications