தாண்டவமாடும் ஈரான்.. அமெரிக்காவின் எண்ணெய் கப்பல் மீது கொடூர தாக்குதல்.. கலக்கத்தில் உலக நாடுகள்
டெஹ்ரான்: ஈரான் மீதான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரப்படுத்தி உள்ளது. ஈரானும் பதிலடியை தீவிரமாக்கி உள்ளது. அந்த வகையில் தான் பாரசீக வளைகுடாவில் உள்ள ஈராக் கடல் எல்லைக்குள் சென்ற அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. தண்ணீருக்குள் சென்று தாக்கும் ட்ரோனை வைத்து இந்த அட்டாக் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரானின் கடற்படை கப்பல்கள் அமெரிக்காவால் தாக்கி அழிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில் உலகளவில் தினமும் 20 சதவீதம் வரை கச்சா எண்ணெய் - கியாஸ் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் இந்தியா - சீனா உள்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்திக்கு எந்த கப்பல்களும் வர வேண்டாம். மீறி வந்தால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. அதையும் மீறி ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. அதுமட்டுமின்றி பிற கடல்பகுதிகளில் பயணிக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய வர்த்தக கப்பல்களை ஈரான் அட்டாக் செய்து வருகிறது.
அமெரிக்க எண்ணெய் கப்பல்
இந்நிலையில் தான் பாரசீக வளைகுடாவில் ஈராக் கடல் எல்லையில் மால்டா நாட்டு கொடியுடன் 'செஃபைரோஸ்', மார்ஷல் தீவுகள் கொடியுடன் 'சேஃப்சீயா விஷ்ணு' உள்ளிட்ட 2 எண்ணெய் கப்பல்கள் பயணித்தது. இதில் 'சேஃப்சீயா விஷ்ணு' கப்பல் அமெரிக்காவை சேர்ந்த 'சேஃப்சீயா டிரான்ஸ்போர்ட் இன்க்' எனும் நிறுவனத்துக்கு சொந்தமானது. 'செஃபைரோஸ்' கப்பல் கிரீஸ் நாட்டை தலைமையிடமாக கொண்ட கப்பலாகும்.
தண்ணீருக்குள் வந்து அடித்த டிரோன்
இதையடுத்து இந்த கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. தண்ணீருக்குள் சீறிப்பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் ட்ரோனை வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில் 38 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்றுள்ளது.
கலக்கத்தில் உலக நாடுகள்
இந்த தாக்குதல் சம்பவத்தால் அமெரிக்கா உள்பட மொத்த உலக நாடுகளும் கலக்கத்தில் உள்ளது. ஏனென்றால் ஈரான் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி பிற நாடுகளுக்கு செல்லும் கப்பல்களையும் இப்போது ஈரான் தாக்க தொடங்கி உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடி கொண்டு இத்தகைய தாக்குதல்களை ஈரான் நடத்துவது என்பது பல்வேறு நாடுகளுக்கான வர்த்தகத்தை பாதித்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போதைய ஆக்ரோஷம் என்பது போரை தொடர்ந்து நீட்டிக்க செய்யலாம். இதனால் தான் இந்த போர் நடவடிக்கையால் இந்தியா உள்பட பல உலக நாடுகளும் கலங்கி போய் உள்ளன.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications