கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம
டெஹ்ரான்: போர் காரணமாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இருப்பினும் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் கப்பல்கள் அவ்வப்போது பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நம் நாட்டுக்கு வருகிறது. இருப்பினும் தற்போது 22 இந்திய கப்பல்கள் அங்கு சிக்கி தவிக்கும் நிலையில் அங்கிருந்து இந்தியாவுக்கு பத்திரமாக வர ஈரான் தனி வழித்தடத்தை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கி உள்ள போர் காரணமாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. மேலும் இந்த ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் வார்னிங் செய்தது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமான இடமாகும்.

சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளிடம் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் - கேஸ் சப்ளை வருகிறது. நம் நாடு மட்டுமின்றி உலகளவில் கச்சா எண்ணெய் - கேஸ் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கும்.
இதனால் இந்தியா, சீனா உள்பட நம்மை சுற்றிய பிற நாடுகளுக்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி கடல்பாதை மிகவும் முக்கியமானதாகும். தற்போது இந்த கடல்வழிப்பாதையை கடந்து நம் நாட்டுக்கு அவ்வப்போது கச்சா எண்ணெய், கேஸ் ஏற்றிய கப்பல்கள் பாதுகாப்பாக வருகிறது. பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பேசியதை தொடர்ந்து ஈரான் நம் நாட்டின் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்து வருகிறது.
இருப்பினும் இன்னும் இந்த ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. நம் நாட்டுக்க வர வேண்டிய 20க்கும் அதிகமன கப்பல்கள் அங்கு சிக்கி உள்ளன. நேற்று முன்தினம் நிலவரப்படி பார்த்தால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் உள்ள 22 இந்திய கப்பல்கள் தவிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்திய கப்பல்களுக்காக ஈரான் தனி கடல்வழிப்பாதையை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12ம் தேதி ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானுடன் தொலைபேசியில் பேசினார். இதையடுத்து இந்திய கப்பல்களுக்கு தனி கடல்வழிப்பாதைக்கான புதிய நடவடிக்கையை ஈரான் எடுத்துள்ளதாம்.
இதனை கடல்சார் டேட்டா மற்றும் ஆய்வு நிறுவனமான லாய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் (LLI) உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம், ''ஹார்முஸ் ஜலசந்தியை இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கு ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. அதற்கான செயல்முறையை தயாராித்து வருகிறது. இந்தியாவின் எரிசக்தி த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது 2 கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளது. புதிய கடல்வழிப்பாதையில் இந்தியாவின் 22 கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய கப்பல்கள் தனித்தனியாக பயணிக்காமல் ஒன்றுக்கொன்று பின்னால் பயணிக்க வேண்டும் என்று ஈரான் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்'' என கூறியுள்ளது.
இதுதொடர்பாக லாய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ரிச்சர்ட் மீட் கூறுகையில், ''இந்தியாவுக்கு எல்பிஜி எடுத்து சென்ற கப்பல் ஈரானின் லாராக் தீவை சுற்றி அந்த நாட்டின் கடல்வழிப்பாதை வழியாக பயணித்துள்ளது. இது வழக்கமாக கப்பல்கள் செல்லும் வழிப்பாதை கிடையாது. வழக்கத்துக்கு மாறாக இந்த வழிப்பாதை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரானின் IRGC கடற்படை மற்றும் துறைமுக அதிகாரிகள் எளிதாக அடையாளம் கண்டு தாக்காமல் இருக்கலாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications