தாண்டவமாடும் இஸ்ரேல்.. ஈரானின் போர்கால தளபதியை கொன்ற நெதன்யாகு! நியமித்ததுமே தீர்த்த கட்டப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ஏற்கனவே ஈரானின் போர்கால தளபதியை இஸ்ரேல் போட்டு தள்ளிய நிலையில் அந்த பொறுப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நபரும் இப்போது கொல்லப்பட்டுள்ளார். இது ஈரானுக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் - ஈரான் நாடுகள் கடுமையாக மோதி வருகின்றன. இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்தது. இந்த மோதலுக்கு நடுவே கடந்த ஆண்டு ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் ஈரானை தாக்கியது.

iran-wartime-chief-of-staff-ali-shadmani-killed-by-israel-attack

இதையடுத்து ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் திடீரென்று ஈரானை தாக்கியது.

ஈரானின் ராணுவ தளம், அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. மேலும் பல தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதில் இஸ்ரேலை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர். தற்போது இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஈரானின் முக்கிய தளபதியை இஸ்ரேல் கொன்றுள்ளது. அதாவது ஈரானின் போர்க்கால தளபதியை அலி ஷத்மானியை இஸ்ரேல் கொன்றுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெஹ்ரானின் மத்திய பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதனை இஸ்ரேல் பாதுகாப்பு துறை உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛"திடீரென கிடைத்த ஒரு வாய்ப்பை தொடர்ந்து, (இஸ்ரேலிய விமானப்படை) தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஒரு ராணுவ கட்டளை மையத்தை தாக்கினோம். போர்க்கால தலைமை தளபதியும், மிக மூத்த இராணுவத் தளபதியும், ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமான நபருமான அலி ஷத்மானியை கொன்றோம்" என்றார்.

முன்னதாக இந்த பொறுப்பில் இருந்தவர் பெயர் கோலம் அலி ரஷித். இவர் 2 நாட்களுக்கு முன்பு நடந்த இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து தான் அந்த பொறுப்புக்கு அலி ஷத்மானி நியமிக்கப்பட்ட நிலையில் அவரும் கொல்லப்பட்டுள்ளார். தற்போது வரை இந்த தாக்குதலில்

ஈரானின் துணை இராணுவப் புரட்சிகரப் படையின் தலைமை கமாண்டராக இருந்த ஜெனரல் ஹொசைன் சலாமி, ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி, ஈரான் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி வந்த முகமது பாகேரி இறந்தனர். இவர்கள் தவிர 10 அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+