அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்?
டெஹ்ரான்: சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பிற அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ஈரான் நாட்டின் அதிபர் மசூத் பெசேஷ்கியான் அறிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் இருக்கும் போர் பதற்றம் தணிய வாய்ப்புள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், ஈராக் உள்பட பல நாடுகளை ஈரான் தாக்கியது. இந்த நாடுகளின் அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் இருப்பதால் அங்கிருந்து தாக்கலாம் என்ற அச்சத்தில் ஈரான் ஏவுகணை, ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியது.

இதனால் ஈரானில் தொடங்கிய போர் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஈரான் மீது எந்த நாடுகளும் பதில் தாக்குதல் நடத்தவில்லை. ஈரான் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அரபு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் தான் அண்டை நாடுகள் மீது இனி ஈரான் தாக்குதல் நடத்தாது என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் அந்த நாட்டின் தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ''எங்களால் தாக்குதலுக்கு உள்ளான அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இதனால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நாங்கள் ஒருபோதும் அண்டை நாடுகளை தாக்கவோ, ஆக்கிரமிக்கவோ விரும்பவில்லை. அமைதியையும், பிராந்திய ஒற்றுமையையும் தான் நாங்கள் விரும்புகிறோம்.
ஈரானை தாக்க தங்களின் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதி வழங்காத அண்டை நாடுகள் மீது நாங்கள் இனி தாக்குதல் நடத்தமாட்டோம். இந்த முடிவை இடைக்கால தலைமை கவுன்சில் எடுத்துள்ளது. இதனால். இனி ஈரானில் இருந்து அண்டை நாடுகளை நோக்கி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படாது.
ஈரான் சரணடைய வேண்டும் என்று எதிரிகள் விரும்புகின்றனர். இந்த விருப்பம் நிறைவேறாது. இதனை எதிரிகள் தங்களின் கல்லறை வரை எடுத்து செல்ல வேண்டியிருக்கும்'' என்றார். இதன்மூலம் ஈரான் தனது அண்டை நாடுகளாக உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என்பதை அறிவித்துள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் தணிய வாய்ப்புள்ளது.
அதேவேளையில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து ஈரானை தாக்கி வருகின்றன. ஈரான் தற்போது தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளதால் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட 'அட்டாக்'கை குறைக்க வாய்ப்பு ஏற்படலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
-
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications