ஹமாஸ் அமைப்புக்கு வாழ்த்து.. இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

Subscribe to Oneindia Tamil

ஜெருசேலம்: ஈரானின் உச்சபட்ச அதிகாரம் பெற்ற தலைவரான அலி கமேனியின் ஆலோசகர் இஸ்ரேல் மீதான பாலஸ்தீனியர்களின் தாக்குதலை ஆதரிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. "பாலஸ்தீன போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று அலி கமேனியின் ஆலோசகர் ரஹீம் சஃபாவி வாழ்த்து தெரிவித்துள்ளதை மேற்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் நாட்டில் இன்றுவழக்கமான காலை நேரமாக இல்லை. அவர்கள் வாழ்வில் மோசமான தருணங்களை சந்திக்கபோகிறார்கள் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். யாருமே நினைத்து கூட பார்க்காத அளவிற்கு திடீரென ஹமாஸ் தீவிராவதிகள் தாக்குதலை தொடங்கினர்.

Irans Supreme leader Ali Khamenei supports the Palestinian attack on Israel

காலை 8 மணி தொடங்கி சரசரவென ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதையும் சரமாரியாக தாக்கின. சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் நிலைகுலைந்து போனது. இது ஒருபுறம் எனில் கொஞ்சம் கூட தாமதிக்காமல் இஸ்ரேல் எல்லையில் இருந்த ராணுவத்தினரை சுட்டுத்தள்ளிவிட்டு, ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தார்கள். கார்கள், பைக்குகள் என பல வாகனங்களில் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுக் கொல்வதாக பதற வைக்கும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உலகையே அதிரவைத்துள்ளது. இதனிடையே ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது தாங்கள் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டு வீரர்களை போர் கைதியாக பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 பேர் இறந்ததாக செய்திகள் வந்துள்ளன. பலர் காயம் அடைந்துள்ளனர். முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் இன்னும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

போர் பிரகடனம்: இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ நாங்கள் யுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதில் நாங்கள் நீங்கள் நிச்சயம் ஜெயிப்போம். எதிரிகள் யோசித்துப் பார்த்திராத விளைவுகளை கண்டிப்பாக சந்திப்பார்கள் என்று எச்சரித்தார். இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி கொடுக்க களம் இறங்கி உள்ளது. அதேநேரம் ஏராளமான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதால் அந்நாடு நிலை குலைந்து போய் இருக்கிறது.

இஸ்ரேல் படைகள் விரைவு: இஸ்ரேல் படைகள் காசா எல்லையை நோக்கி விரைந்துள்ளன. இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்கெங்கு இருக்கிறார்கள்என்பதை அறிந்து சுட்டுத்தள்ள இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. கண்டிப்பா காசா மீது கடுமையானதாக்குதலை இஸ்ரேல் முன்னெடுக்கும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேற்கு நாடுகள் கண்டிப்பு: இதனிடையே ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உள்பட பல்வேறு மேற்கு நாடுகள் கண்டித்து வருகின்றன. இதனிடையே இஸ்ரேல்மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதை ஈரான் ஆதரிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஈரான் ஆதரவு: ஈரானின் உச்சபட்ச அதிகாரம் பெற்ற தலைவரான அலி கமேனியின் ஆலோசகர் ஆலோசகர் ரஹீம் சஃபாவி இஸ்ரேல் மீதான பாலஸ்தீனியர்களின் தாக்குதலை ஆதரிப்பதாக கூறியுள்ளார். இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மழை போல் வீசப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், "பாலஸ்தீன போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம், பாலஸ்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் பாலஸ்தீனப் போராளிகளுக்கு நிச்சயம் ஆதரவாக நிற்போம் என்றார்.

சிறைபிடிப்பு: இதனிடையே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, தெற்கு நகரமான ஓஃபாகிமில் பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலியர்களை சிறைபிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேலிய தொலைக்காட்சி சேனலான ரெக்சாட் 13 (Reshet 13) செய்தியினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.

போர் கைதிகள்: பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பொதுமக்களை சிறைபிடித்து மோட்டார் சைக்கிள் மூலம் காசாவிற்கு கொண்டு செல்லும் பல்வேறு வீடியோக்கள் சமூக ஊடங்களில்வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் பேசும் பாது, "எங்களால் பிடிக்கப்பட்டவர்கள் யாரும் பணயக்கைதிகள் அல்ல - அவர்கள் போர்க் கைதிகள்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+