சைக்கிளை 'ஓரங்கட்டி' விட்டு வாஷிங்டனுக்கு ஓடி வந்த ஒபாமா...!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது விடுமுறையை ரத்து செய்து விட்டு வாஷிங்டனுக்கு விரைந்துள்ளார்.
அமெரிக்காவில் இனக்கலவரம் வெடித்துள்ளதாலும், ஈராக் விவகாரத்தாலும் அவர் தனது விடுமுறையைக் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கோடை விடுமுறையை தற்காலிகமாக ரத்து செய்து விட்டு தலைநகருக்கு வந்து விட்டார்.
கோல்ப் ஆடுவது, சைக்கிளிங் செய்வது, கடற்கரைக்குப் போய் ஜாலியாக குடும்பத்துடன் செலவிடுவது என பல திட்டங்களை வைத்திருந்தார் ஒபாமா. ஆனால் எல்லாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் விமர்சனம்
இனக் கலவரம் வெடித்துள்ள நிலையில் ஈராக்கில் அமெரிக்கப் படையினர் வான்வெளித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிபர் ஒபாமா, கோடை விடுமுறைக்குப் போனது குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர்.

தற்காலிக பிரேக்
இந்தப் பின்னணியில்தான் ஒபாமா விடுமுறையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு தலைநகர் விரைந்துள்ளார்.

பெர்குசன் கலவரம்
ஒபாமாவி்ன் வருகைக்கு சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பெர்குசன் நகரில் வெடித்துள்ள இனக் கலவரம் தொடர்பாக விவாதிக்க அவர் வந்திருக்கலாம் என்று சந்தேக்கிக்கப்படுகிறது.

நாளை திரும்புவார்
அதேசமயம் தனது ஆலோசனையை முடித்து விட்டு செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் விடுமுறைக்காக அவர் மார்த்தான்ஸ் வின்யார்டுக்குப் புறப்பட்டுப் போவார் என்று கூறப்படுகிறது.

கோல்ப் ஆடினார்
முன்னதாக கோடை விடுமுறையை கழித்து வந்த ஒபாமாக கோல்ப் ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஜாஸ் நிகழ்ச்சிக்குப் போயிருந்தார். மனைவி மிஷலுடன் டின்னருக்கும் போயிருந்தார்.

மகளுடன் சைக்கிள் சவாரி
மேலும் தனது மகள் மலியாவுடன் காட்டுப்பகுதியில் சைக்கிள் ஓட்டியும் சந்தோஷித்தார். இப்போது பிரேக் முடிந்து திரும்பியதும் விடுமுறையைத் தொடரவுள்ளார் ஒபாமா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications