For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக்தாத்துக்கும் வந்துட்டாங்க... வான் தாக்குதல் நடத்துங்க.. அமெரிக்காவிடம் கெஞ்சும் ஈராக்!!

By Mathi
Google Oneindia Tamil News

பாக்தாத்: சதாம் உசேனின் ஆதரவுப் படையான சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைநகர் பாக்தாத்தை நெருங்கிவிட்ட நிலையில் அவர்கள் மீது விமான தாக்குதல்கள் நடத்துங்கள் என்று அமெரிக்காவிற்கு ஈராக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். முதலில் மொசூல் நகரைக் கைப்பற்றத் தொடங்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் படிப்படியான முன்னேறிவிட்டனர்.

Iraq requests US air strikes as Isis insurgents tighten grip on oil refinery

திக்ரீத், பைஜா, ஜலாலா என பல முக்கிய நகரங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். வசமாகிவிட்டன. தற்போது தலைநகர் பாக்தாத்துக்கு மிக அருகில் அந்த அமைப்பினர் வந்துவிட்டதால் உச்சகட்ட போர் நடைபெறும் நிலை உருவாகி உள்ளது.

தலைநகர் பாக்தாத்தைக் காப்பாற்றும் வகையில் அமெரிக்காவிடம் ஈராக் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவோ, ஈராக்கின் வேண்டுகோளை பரிசீலித்துக் கொண்டிருபதாக கூறி வருகிறது.

English summary
Iraq has asked the US to stage air attacks on Sunni insurgents as the Islamist fighters edged closer to full control of Iraq's largest oil refinery and continued to hold out against troops trying to retake the city of Tal Afar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X