மயில், வேல், பாம்பு, தீபாரதனை, எண்ணெய் விளக்குடன் தமிழரைப் போல வழிபாடு நடத்தும் ஈராக் யாசிதி மக்கள்
மயில், வேல், பாம்பு, தீபாரதனை, எண்ணெய் விளக்குடன் தமிழர்களைப் போல வழிபாடு செய்யும் ஈராக்கின் யாசிதி மக்கள்.
பாக்தாத்: மயில், வேல், பாம்பு, தீபாரதனை, எண்ணெய் விளக்குடன் தமிழர்களைப் போல வழிபாடு நடத்துகின்றனர் ஈராக் யாசிதி இனமக்கள். இது குறித்த விரிவான ஆய்வு அவசியமான ஒன்றாகவே இருக்கிறது.
சிந்து சமவெளி நாகரிகம் ஆதித் தமிழர் நாகரிகமே; இந்திய துணைக் கண்டனத்துக்கு அப்பாலும் ஆதித் தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றாக ஈரானில் பிராகுய் எனும் திராவிட மொழி பேசப்பட்டு வருகிறது.
ஈரானைத் தாண்டி ஈராக்கில் யாசிதி என்ற இனம் உள்ளது. இவர்கள் தங்களை இந்திய துணைக் கண்டத்துடன் தொடர்புடையவர்களாக கருதுகின்றனர்.

வழிபாட்டு முறை
இஸ்லாமியர்களாக, கிறிஸ்துவர்களை தங்களை இப்போதும் மாற்றிக் கொள்ளாமல் யாசிதி இன மக்கள் தனித்தன்மையுடன் வாழ்கின்றனர். இவர்களின் வழிபாட்டு முறை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

மயிலும் பாம்பும்
யாசிதிகளின் வழிபாட்டு தலங்கள் கோபுர வடிவில் இருக்கின்றன. இவர்களது பிரதான வழிபாட்டு உருவம் மயிலும் பாம்பும்தான்.

தீபாரதனை
அத்துடன் தமிழர்களைப் போலவே எண்ணெய் விளக்கு ஏற்றி, தீபாரதனை காட்டி வழிபாடு நடத்துகின்றனர். ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொடூரமாக வேட்டையாடப்பட்டவர்கள் யாசிதிகள்.

தமிழர் வழிபாடு
அப்போது இந்தியாவின் உதவியை நாடி யாசிதி இனப் பிரதிநிதிகள் இங்கே வருகையும் தந்தனர். தமிழர் வழிபாட்டு முறையை அப்படியே இன்றும் பின்பற்றுகிறவர்களாக யாசிதி இனமக்கள் இருக்கின்றனர். மயில்கள் பொறித்த பானை ஓடுகள் அன்றைய சிந்துசமவெளி சான்றுகளாக இருக்கின்றன.

ஆய்வுக்குரிய ஒன்று
தமிழகத்தில் குன்றுகள் முருகனின் வழிபாட்டு தலங்களாக இருக்கின்றன. ஈராக்கில் யாசிதி இனமக்களும் குன்றில்தான் தங்களது கோபுர வடிவிலான வழிபாட்டு தலங்களை அமைத்துள்ளனர். யாசிதி இனமக்களுடனான இந்திய துணைக் கண்டத்து உறவும் தமிழர் வழிபாட்டு முறையை பின்பற்றுவதும் ஆய்வுக்குரிய அவசியமான ஒன்று,
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications