ஈராக்கில் பயங்கர குண்டுவெடிப்பு.. 21 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்து இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்து இருக்கிறது. பாக்தாத் குண்டுவெடிப்பில் இதுவரை 21 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று மாலை திடீர் என்று குண்டு ஒன்று வெடித்தது. அங்கு இருந்த முக்கியமான கடைவீதி ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.

கடைவீதியில் ஆள் இல்லாமல் நின்று கொண்டிருந்த கார் வெடித்து இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இந்த மோசமான சம்பவத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 21 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை












Click it and Unblock the Notifications