உடலுறவுக்கு ஆடை கட்டாயம்.. சுயஇன்பத்துக்கு அதிரடி தடை.. அழகிய தீவின் அதிசய ரூல்ஸ்.. காரணம் இதுதானாம்
அடிக்கடி பாலியல் ரீதியாக உறவு வைத்து கொண்டால் பெண்கள் பலவீனம் அடைவார்கள் என மக்கள் நம்புகின்றனர்.
டப்லின்: உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் வசித்து வரும் மக்கள் வெவ்வேறு பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் அயர்லாந்தில் ஒரு தீவில் முத்தம், சுயஇன்பம், காதலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கணவன்-மனைவியாக இருந்தாலும் கூட ஆடைகள் அணிந்தே தாம்பத்திய உறவு வைத்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. அதோடு ஒரு குழந்தை பிறந்த பிறகு தாம்பத்திய உறவை தம்பதிகள் விரும்புவது இல்லை எனவும், இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா உள்பட உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் வாழும் மக்களின் குணம் என்பது வித்தியாசப்படுகிறது. மேலும் அவர்களின் உணவு, ஆடை பழக்கம் வழக்கம் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் முற்றிலும் மாறுபட்டதாகவே அமைகிறது. இருப்பினும் இதில் சில நாடுகளில் பின்பற்றப்படும் வித்தியாசமான செயல்கள் என்பது பேசும் பொருளாகிவிடும்.
அந்த வகையில் தான் தற்போது தீவு ஒன்றில் தீவில் வசித்து வரும் பழங்குடி மக்கள் தான் தாம்பத்தியம், பாலியல் உறவு முறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். வித்தியாசமாகவும் அதேநேரத்தில் விசித்திரமான கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வரும் அந்த பழங்குடி மக்கள் எங்கு வசித்து வருகின்றனர். பாலியல் உறவு தொடர்பாக அவர்கள் பின்பற்றி வரும் நடைமுறைகள் என்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:

அழகிய தீவு இன்னிஸ் பெக்
உலகில் உள்ள மிகவும் அழகான நாடுகளில் ஒன்று அயர்லாந்து. இந்த நாட்டில் கடலுக்கு நடுவே பல தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளில் ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தீவுகளிலும் வசித்து வரும் மக்கள் மற்றொரு தீவில் வசித்து வரும் மக்களிடம் இருந்து பழக்க வழக்கங்களில் வேறுபட்டுள்ளனர். இங்குள்ள அழகிய தீவுகளில் ஒன்று தான் இன்னிஸ் பெக். இங்கு சுமார் 350க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர்.

உடலுறவை மோசமாக கருதும் மக்கள்
இங்குள்ள பழங்குடியின மக்கள் ஐரிஷ் மொழி பேசி வருகின்றனர். இவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல் உள்ளிட்டவற்றை தொழிலாக கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த தீவில் உள்ள மக்கள் தான் உடலுறவை மோசமான ஒன்றாக கருதுகின்றனர். இதனால் அவர்கள் தாங்களாகவே சில கட்டுப்பாடுகளை வகுத்து கொண்டுள்ளனர்.

ஆடைகளுடன் தான் தாம்பத்தியம்
அதாவது திருமணமான தம்பதியாக இருந்தாலும் கூட உள்ளாடை அணிந்தே தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். உடலில் இருந்து முழு ஆடைகளை அகற்றுவதை அவர்கள் குற்றமாக கருதுகின்றனர். மேலும் அடிக்கடி தாம்பத்திய உறவு கொள்வதும் அங்கு நடைமுறையில் இல்லையாம். குழந்தைகள் வேண்டும் என்றால் மட்டுமே கணவன்-மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்களாம். அதுவும் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும். அதன்பிறகு அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது இல்லையாம். அதிகப்படியான உடலுறவு என்பது பெண்களை பலவீனமாக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் உள்ளதால் இந்த கட்டுப்பாட்டை அவர்கள் பின்பற்றுகின்றனராம்.

முத்தம், சுயஇன்பத்துக்கு தடை
மேலும் சுயஇன்பம், முத்தம், ஓரினச்சேர்க்கை, திருமணத்துக்கு முந்தைய உடலுறவு உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முன்பு காதல் செய்வதை நினைத்து கூட பார்க்க முடியாது. மேலும் தினமும் குளித்தால் ஒவ்வொருவரும் அழகாக தெரிவார்கள் என்பதால் பலபேர் குளிப்பதை கூட தவிர்த்து விடுவார்களாம். மாறாக அனைவரும் கை, கால், முகத்தை மட்டுமே தண்ணீர் கொண்டு கழுவி கொள்கின்றனர். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் இதனால் ரொமான்ஸ் எதுவும் இல்லாத வாழ்க்கையை அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மாதவிடாய் கால கட்டுப்பாடு
அதோடு திறந்த வெளியில் சிறுநீர், இயற்கை உபாதை சென்றால் கடும் தண்டனை வழங்கும் நடைமுறை உள்ளது. மேலும் அனைத்து வகையான நடவடிக்கைகளிலும் பாலினம் ரீதியாக ஆண், பெண்கள் என தனித்தனியே பிரித்து வைக்கப்படுகிறார்கள். அதோடு, சிறுவர்கள் மட்டுமே செய்யக்கூடிய செயல், சிறுமிகள் மட்டுமே செய்யக்கூடிய செயல் என பல விஷயங்கள் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் வீட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாதாம்.

வீடுகள் தோறும் குழந்தைகள்
இதுதொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை ங்கு வசிப்பவர்கள் தான் கூடி தீர்மானித்து கொள்கிறார்களாம். தாம்பத்தியம் தொடர்பாக இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் கூட அங்குள்ள அனைத்து வீடுகளில் குழந்தைகள் இருக்கின்றனராம். இந்த கட்டுப்பாட்டை அறிந்து கொள்ளும் பலருக்கும் இது ஆச்சரியமான விஷயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications