இதுதான் சான்ஸ்.. பாலஸ்தீனம் சுதந்திர நாடாக மாறனுமா? ஐடியா சொன்ன இந்தியா! திரும்பும் உலக நாடுகள்
டெல்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் பாலஸ்தீனம் சுதந்திர நாடாக மாற வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை முக்கிய அட்வைஸ் வழங்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று 6 வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியாகும். இந்த இடம் தற்போது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த இடத்தை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் என்பது நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது வரை 2000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இன்னும் மோதல் நீடிப்பதில் பலி எண்ணிக்கை என்பது இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இருட்டில் மக்கள் வசிக்கும் நிலையில் உணவு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மோதல் தொடங்கிய நாளிலேயே இதனை பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசி இந்தியா இஸ்ரேலுடன் இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அரிந்தம் பாக்சி கூறியதாவது:
‛‛பாலஸ்தீனம் சுதந்திர நாடாக செயல்பட இந்தியா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. பாலஸ்தீனத்தை பொறுத்தவரை இஸ்ரேலுடன் இணைந்து பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லை பகுதியை நிர்ணயம் செய்து சுதந்திரமான நாடாக பாலஸ்தீனம் செயல்பட இஸ்ரேலுடன் மீண்டும் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என இந்தியா பரிந்துரை செய்கிறது. அதேவேளையில் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து போராட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது.
‛ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்களை விமானத்தில் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் இன்று நம் நாட்டுக்கு வர உள்ளது. இந்த விமானத்தில் இந்தியர்கள் நாடு திரும்ப தூதரகங்களை தொடர்பு கொள்ள வேண்டும்'' என்றார்.
-
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications