ஹமாஸ் தலைவர் மரணத்துடன் போர் முடிகிறதா? பாலஸ்தீனத்தில் அடுத்து என்ன நடக்கும்?
காசா: காசா மீதான தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹா சின்வார் இஸ்ரேல் படைகளால் நேற்று கொல்லப்பட்டார். இந்த மரணத்துடன் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதெல்லாம் முடியாது, போர் நிச்சயம் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் எனும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன விடுதலை குழு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் பணய கைதிகளாகவும் பிடித்து செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் இஸ்ரேலின் ஈகோவை தூண்டிவிட்டது. எனவே, ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கிறோம். அதற்காக பாலஸ்தீனம் மீது போர் தொடுக்கிறோம் என அந்நாட்டின் ராணுவம் களத்தில் இறங்கியது. போர் தொடங்கி ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில், இதில் சம்பந்தமே இல்லாத சுமார் 41,000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இறுதியாக கடந்த வியாழக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாரை ராஃபாவில் வைத்து கொன்றது. அவரது கொலையுடன் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர் இப்போதுதான் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி, பதற்றத்தை ஏற்படுத்தினார். அதாவது ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற பணய கைதிகளை மீட்கும் வரை போர் முடியாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. எனவே காசா மீது தாக்குதல் நீடித்து வருகிறது.
மறுபுறம், ஹமாஸ் தரப்பில் புதிய தலைவரை அறிவிக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஷுரா கவுன்சில் இந்த வேலையை கையில் எடுத்திருக்கிறது. இந்த கவுன்சில்தான் ஹமாஸின் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்கும். சின்வாரும் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். தற்போது தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய தலைவர், காசாவில் வசிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. வெளியிலிருந்து கூட தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.
ஆனால், அவர் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் அளவுக்கு தகுதியும், அதிகாரமும் படைத்தவராக இருக்க வேண்டும். இப்போதைக்கு லிஸ்ட்டில் இருவரின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. ஒன்று கலீத் மெஷால், மற்றொன்று ஷூரா கவுன்சிலின் தலைவராக இருக்கும் முகம்மது டார்விஷ். இதில் கலீத் மெஷால் ஏற்கெனவே ஹமாஸுக்கு தலைமை தாங்கியிருக்கிறார். ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து கொல்லப்பட்ட ஹனியேவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டவராவார்.
இருவரியில் எவரேனும் ஒருவர் தலைவராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இஸ்ரேலை பொறுத்த வரை ஆயுதங்களை போட்டுவிட்டு, பணய கைதிகளை விடுவித்தால் போர் நிறுத்தம் சாத்தியம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் புதிய தலைவரை விரைவில் ஹமாஸ் அறிவிக்க இருப்பதால், இப்போதைக்கு இந்த போர் முடிவுபெறாது என்று சொல்லப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications