ஈரானை கதறவிடும் டிரம்ப்.. அமெரிக்கா போர்க்கப்பலில் இருப்பிடம் தெரியாமல் திணறும் கமேனி.. பின்னணி
டெஹ்ரான்: ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. ஈரான் அருகே அமெரிக்கா தனது யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இந்த கப்பல் தனது இருப்பிடத்தை அறியும் ஏஐஎஸ் சிஸ்டமை ஆஃப் செய்து வைத்துள்ளது. இதனால் அந்த கப்பலை கண்டுபிடிக்க முடியாமல் ஈரான் திணறி வருகிறது. இந்நிலையில தான் ஈரானால் அந்த கப்பலை கண்டுபிடிக்க முடியுமா? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் உயர்மட்ட தலைவராக அயதுல்லா அலி கமேனி உள்ளார். ஈரானில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இதனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தனது விமான தளம்,நட்பு நாடுகளின் விமான தளங்களில் அமெரிக்கா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. அதேபோல் ஈரானையொட்டி கடல் பகுதியில் அமெரிக்கா தனது போர்க்கப்பல் மற்றும் நாசக்கார கப்பல் என்று அறியப்படும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பி உள்ளது.
குவிக்கப்படும் போர் விமானங்கள்
ஏற்கனவே மத்திய கிழக்கில் உள்ள ஜோர்டான் நாட்டின் பிரிட்டனுக்கு சொந்தமான விமானப்படை தளத்தில் F-15E Strike Eagle jets என அழைக்கப்படும் 12 போர் விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தி உள்ளது. இந்த விமானங்களை கொண்டு தான் கடந்த ஆண்டு ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியது. தற்போது அந்த விமானங்கள் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வானிலேயே எரிபொருள் நிரப்பக்கூடிய KC-135 aerial refuellers விமானம், மற்றும் C-130 கார்கோ விமானங்கள் உள்ளிட்டவையும் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர சவுதி அரேபியா, கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்திலும் போர் விமானங்கள், வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளன.
நாசக்கார போர்க்கப்பல்
அந்த வகையில் தான் எஃப்-35சி மறறும் எஃப்/ஏ-18 போர் விமானங்களை கொண்ட யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் எனும் விமானம் தாங்கிக் கப்பலும் ஈரானை சுத்துப்போட்டுள்ளது. இது நாசக்கார போர்க்கப்பலாகும். இந்நிலையில் தான் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நுழைந்துள்ளது.
ஸ்விட்ச் ஆஃப்பில் போர்க்கப்பல்
இந்த கப்பலை கண்டுபிடிக்க ஈரான் சேட்டிலைட் மற்றும் ட்ரோன்களை அனுப்பி வருகிறது. இதனை அறிந்த அமெரிக்கா தற்போது டிரான்பாண்டரை ஆஃப் செய்துள்ளது. அதாவது ஏஐஎஸ் எனும் ஆட்டோமேட்டிக் ஐடென்டிபிகேஷன் சிஸ்டம்ஸ் (Automatic Identification System -AIS) ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக போர்க்களின்போது தாக்குதலில் ஈடுபடும் போர்க்கப்பல்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடும். இந்த ஏஐஎஸ் சிஸ்டம் ஆனில் இருந்தால் இருந்தால் மட்டுமே போர்க்கப்பல்களின் நகர்வு மற்றும் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக கப்பல்கள் நகரும்போது இன்னொரு கப்பல்கள் மோதாமல் இருப்பதற்கும் இது பயன்படும். ஆஃப் செய்தால் எதிரிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
ஈரானையொட்டி வலம் வரும் கப்பல்
தற்போது ஈரானையொட்டிய அரபிக் கடல் மற்றும் ஓமன் வளைகுடா கடல் என்பது பல நூறு ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை கொண்டது. தற்போது அங்கு தான் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்கப்பல் வலம் வருவதாக கூறப்படுகிறது.
இந்த கப்பலில் ஏஐஎஸ் சிஸ்டம் ஆஃப் செய்து இருப்பது ஈரானுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. மேலும் இந்த ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் 30 நாட்ஸ் வேகத்தில் செல்லும். அதபோல் அந்த கப்பல் இருந்த இடம் குறித்த டேட்டா அடுத்த ஒரு மணிநேரத்தில் அழிந்து விடும்.
திணறும் ஈரான்
இதனால் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலின் இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் ஈரான் திணறி வருகிறது. ஏஐஎஸ் ஆஃப் செய்யப்பட்டு இருந்தாலும் கூட கப்பலில் இருந்து ரேடார் மற்றும் ரேடியோ சிக்னல்கள் வெளிவரும்.
இந்த சிக்னல்களை வைத்து கூட ஒரு கப்பலில் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும். ஈரானிடமும் அந்த வசதி உள்ளது. ஆனால் அமெரிக்க எமிஷன் கண்ட்ரோல் (EMCON) தொழில்நுட்படத்தை பயன்படுத்தி அதற்கம் செக் வைத்துள்ளது.
செயற்கைகோள் - ட்ரோன் பலனில்லை
மேலும் இந்த ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தனியாக எங்கும் செல்லாது. அதனுடன் Arleigh Burke-class destroyers எனும் கப்பலும் செல்கிறது. இது ஒரு பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடத்தும் கப்பலாகும். இந்த கப்பல் ஒரே நேரத்தில் எதிரிகளின் பாதுகாப்புஅச்சுறுத்தல்களை கண்டறிந்து சிக்னல் செய்யும்.
கண்காணிப்பு ட்ரோன்கள் நெருங்கும் முன்பே அதுபற்றி அறிந்து சிக்னல் செய்யும். இப்படியான சூழல் காரணமாக ஈரானுக்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை கண்டுபிடிக்க அதிநவீன ட்ரோன், செயற்கைகோள் உதவியை பயன்படுத்தியும் ஈரான் திணறி வருகிறது. இது ஈரானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications