ஆஸ்திரேலியர்கள், மேற்கத்திய நாட்டவரை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தலைமை உத்தரவு
பாக்தாத்: ஆஸ்திரேலியர்கள் உள்பட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களை தாக்குமாறு ஐஎஸ் அமைப்பின் சன்னி பிரிவு தீவிரவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது அல் அத்னானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈராக்கிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிடும் நாடுகளைச் சேர்ந்தவர்களை தாக்கவும். நீங்கள் நம் மீது நம்பிக்கை இல்லாத அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் அதிலும் குறிப்பாக அழுக்குப்பிடித்த பிரான்ஸ் நாட்டவர், ஆஸ்திரேலியர் அல்லது கனடாவைச் சேர்ந்தவர், ஐஎஸ் அமைப்புக்கு எதிராக கூட்டணி வைத்து போர் தொடுக்கும் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள். இதில் யாருடைய அறிவுரையையோ, தீர்ப்பையோ எதிர்பார்க்கக் கூடாது.
நம்பிக்கை இல்லாதவர் சாதாரண ஆளாக இருந்தாலும் சரி ராணுவத்தினராக இருந்தாலும் சரி அவர்களை கொலை செய்யுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் கடந்த வாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டதையடுத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் உண்மையானது தான் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்பு ஐஎஸ்ஐஎஸ் என்று அழைக்கப்பட்ட ஐஎஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அத்னானி என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications