அது என்ன "ரோக்" நாடு? பாகிஸ்தான் கையில் அணு ஆயுதம் இருப்பதால் இவ்வளவு சிக்கலா? சுதாரித்த இந்தியா

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கட்டுப்படுத்த முடியாத, கட்டுப்பாடில்லாத, சரியான வழிகாட்டி இல்லாத நாடாக மாறிவிட்டது. அது போன்ற நாட்டிடம் அணு ஆயுதம் சிக்கி இருப்பது ஆபத்தான விஷயம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த நிலையில் அதன் சிக்கல்களை இங்கே பார்க்கலாம்.

பாகிஸ்தான் இந்தியா போர் முடிந்து 5 நாட்களுக்கு பின்பாக இன்று ஸ்ரீநகர் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கே பாதுகாப்பு படை வீரர்கள் முன் பேசுகையில் உலக நாடுகளுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்தார்., அதில் உலக நாடுகளுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். பாகிஸ்தான் போன்ற பொறுப்பற்ற மற்றும் முரட்டுத்தனமான நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பானதா? பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் IAEA (சர்வதேச அணுசக்தி நிறுவனம்) மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

pakistan Jammu Kashmir

பாகிஸ்தான் பொறுப்பற்ற முறையில் இந்தியாவிற்கு அணு ஆயுத அச்சுறுத்தல்களை பலமுறை விடுத்துள்ளதை உலகம் முழுவதும் கண்டிருக்கிறது. இப்படிப்பட்ட பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது சரியாக இருக்காது. இதை பற்றி உலக நாடுகள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

அது என்ன ரோக் நாடு?

சர்வதேச அரசியல் உலகில் rogue என்ற வார்த்தை பிரபலம். முக்கியமாக உளவாளிகள் உலகில் இந்த வார்த்தை பிரபலம். தமிழில் இதை முரட்டுத்தனம் என்று கூட கூறலாம். உதாரணமாக ஒரு உளவாளி.. தனது நாட்டிற்காக உளவு செய்யாமல் தனது நாட்டிற்கு எதிராகவே திரும்பினால் அதை rogue என்பார்கள்.. எப்படி அடுத்து செயல்படுவார்கள் என்று கணிக்க முடியாமல் மாறினால் அதை rogue என்பார்கள். பாகிஸ்தான் இப்படித்தான் "ரோக்" நாடக உருவெடுத்து உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

உதாரணமாக கடந்த வாரம் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துவிட்டது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவித்துவிட்டது. பாகிஸ்தானின் ராணுவ செய்தி தொடர்பு துறை அறிவித்துவிட்டது. ஆனால் போர் அறிவிக்கப்பட்ட அதே நாள் இரவு மீண்டும் 2 மணி நேரம் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறியது. எல்லையில் டிரோன்களை வைத்து தாக்குதல் நடத்தியது.

இதைத்தான் குறிப்பிட்டு பாகிஸ்தான் "ரோக்" நாடக உருவெடுத்து உள்ளது என்கிறார்கள். அந்நாட்டு ராணுவம் போர் நிறுத்தத்திற்கு இடையிலும் தாக்குதல் நடத்தி உள்ளது. அதாவது அரசு போர் நிறுத்தும் என்கிறது. ஆனால் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. அரசு போரே இல்லை என்று கூறுகிறது. ஆனால் ராணுவம் அதை கேட்காமல் தாக்குதல் நடத்துகிறது.

இதைத்தான் குறிப்பிட்டு பாகிஸ்தான் "ரோக்" நாடக உருவெடுத்து உள்ளது என்கிறார்கள். அவர்களின் ராணுவம் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. சொந்த நாட்டின் முடிவையே அந்நாட்டு ராணுவம் மதிப்பது இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அதாவது மேலே குறிப்பிட்டது போல.. கட்டுப்பாட்டை இழந்த உளவாளி போல பாகிஸ்தான் மாறிவிட்டது.

அணு ஆயுதம் ஏன்?

இப்படிப்பட்ட பாகிஸ்தான் எப்போது அணு ஆயுதத்தை பயன்படுத்தும், தாக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. இது உலகிற்கே ஆபத்து விளைவிக்கும்..

உதாரணமாக பாகிஸ்தானில் கடந்த சில நாட்களில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நிலநடுக்கங்கள் பல்வேறு விதமான சந்தேகங்களை, குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை அடுத்து அங்கே நடக்கும் நிலநடுக்கங்கள் வெறும் நிலநடுக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் நாட்டில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை தொடர்ச்சியாக இரண்டு நிலநடுக்கங்களை சந்தித்தது - காலையில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.

புவியியலாளர்கள் மற்றும் வானிலை நிபுணர்கள் நில அதிர்வு இமயமலைப் பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிட்டனர். இங்கே நிலநடுக்கம் ஏற்படுவது பொதுவான நிகழ்வுதான். ஆனால் இந்த நேரத்தில் அங்கே நிலநடுக்கம் ஏற்படுவது அணு ஆயுத சோதனையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிரானா மலைகளில் உள்ள பாகிஸ்தான் அணு ஆயுத சேமிப்பு வசதியின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இங்கே இருக்கும் சுரங்கப்பாதை தாக்கப்பட்டது. அதே நாளில்தான் அங்கே 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கே ஒன்று அணு ஆயுத வசதி ஏதாவது தகர்க்கப்பட்டு அதனால் அணு கசிவு ஏற்பட்டு இருக்கலாம். அங்கே ஒன்று அணு ஆயுத வசதி தகர்க்கப்பட்ட நிலையில் அங்கே இதனால் அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 13 நாட்களில் 4 நிலநடுக்கங்கள் அங்கே ஏற்பட்டு உள்ளதுதான் சந்தேகத்திற்கு காரணம். ஏப்ரல் 30, மே 5, 10 & 12 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது. இது இயற்கையான நடுக்கங்களா? நிலத்தடி உள்ளே நடத்தப்படும் அணுசக்தி சோதனைகளா? வேறு ஏதாவது இராணுவ நடவடிக்கைகளின் அறிகுறிகளா? இந்தியா நடத்திய தாக்குதலின் தாக்கமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+