"ரோக்" நாடக உருவெடுத்த பாகிஸ்தான்.. அந்த 2 மணி நேரம்.. யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது பாக்?
இஸ்லாமாபாத்: சர்வதேச அரசியல் உலகில் rogue என்ற வார்த்தை பிரபலம். முக்கியமாக உளவாளிகள் உலகில் இந்த வார்த்தை பிரபலம். தமிழில் இதை முரட்டுத்தனம் என்று கூட கூறலாம். உதாரணமாக ஒரு உளவாளி.. தனது நாட்டிற்காக உளவு செய்யாமல் தனது நாட்டிற்கு எதிராகவே திரும்பினால் அதை rogue என்பார்கள்.. எப்படி அடுத்து செயல்படுவார்கள் என்று கணிக்க முடியாமல் மாறினால் அதை rogue என்பார்கள். பாகிஸ்தான் இப்படித்தான் "ரோக்" நாடக உருவெடுத்து உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவுடன் மேற்கொண்டு வந்த மோதல் போக்கை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு கிட்டத்தட்ட சரண்டர் போன்ற நடவடிக்கை ஆகும். பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் ராணுவத்திற்கு இணையான பலம் கொண்டது இல்லை. பாகிஸ்தான் இந்தியாவுடன் தொடர்ந்து மோதினால் 10 நாட்கள் கூட போரில் நீடிக்க முடியாது. இதன் காரணமாக பாகிஸ்தானை போரை நிறுத்துவதாக அறிவித்தது.

நேற்று பாகிஸ்தான் மீதான தாக்குதலை முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சு வார்த்தையில் தாக்குதலை நிறுத்துவது என முடிவு என்று தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்தியதாக இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மோதல்களை நிறுத்துவது குறித்து நேற்று மதியம் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதே சமயம், பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமில்லா நடவடிக்கையில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மீண்டும் அத்துமீறல்
நேற்று போர் நிறுத்தம் செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துவிட்டது.
இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துவிட்டது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவித்துவிட்டது.
பாகிஸ்தானின் ராணுவ செய்தி தொடர்பு துறை அறிவித்துவிட்டது.
ஆனால் நேற்று இரவு மீண்டும் 2 மணி நேரம் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறியது. எல்லையில் டிரோன்களை வைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் உடனே இந்திய ராணுவம் தலையிட்டு பதிலடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த எல்லையில் அமைதி திரும்பியது.
"ரோக்" நாடக உருவெடுத்த பாகிஸ்தான்
இதைத்தான் குறிப்பிட்டு பாகிஸ்தான் "ரோக்" நாடக உருவெடுத்து உள்ளது என்கிறார்கள். அந்நாட்டு ராணுவம் போர் நிறுத்தத்திற்கு இடையிலும் தாக்குதல் நடத்தி உள்ளது. அதாவது அரசு போர் நிறுத்தும் என்கிறது. ஆனால் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. அரசு போரே இல்லை என்று கூறுகிறது. ஆனால் ராணுவம் அதை கேட்காமல் தாக்குதல் நடத்துகிறது.
இதைத்தான் குறிப்பிட்டு பாகிஸ்தான் "ரோக்" நாடக உருவெடுத்து உள்ளது என்கிறார்கள். அவர்களின் ராணுவம் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. சொந்த நாட்டின் முடிவையே அந்நாட்டு ராணுவம் மதிப்பது இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அதாவது மேலே குறிப்பிட்டது போல.. கட்டுப்பாட்டை இழந்த உளவாளி போல பாகிஸ்தான் மாறிவிட்டது.












Click it and Unblock the Notifications