Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமானம் வெடித்து பலியான வாக்னர் குழு தலைவர்! பின்னணியில் ரஷ்ய புடின்? சினிமாவில் கூட இப்படி நடக்காதே

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: நேற்று ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் பலியானார். அவரின் மரணத்திற்கு பின் ரஷ்ய அரசின் சூழ்ச்சி இருக்கலாம் என்று வாக்னர் குழு குற்றச்சாட்டு வைக்கிறது. இந்த மரணம் வாக்னர் குழுவின் முடிவுரையாக பார்க்கப்படுகிறது.

வாக்னர் குழுவின் இந்த அழிவு பற்றி பார்க்கும் முன்.. அந்த குழுவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். equalizer, taken, john wick போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு பிரைவேட் ஆர்மி அல்லது அஸாஸின் கும்பல்கள் பற்றி தெரிந்து இருக்கும். அதாவது இவர்கள் தனியார் ராணுவம், அல்லது காசுக்கு கொலை செய்யும் எலைட் கொலைகார கும்பல்.

Is Russia Putin a mastermind behind the death of Wagner groups top leaders in place crash?

உலகில் பெரிய அரசுகள், பெரிய நபர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை தீர்த்து கட்ட பயன்படுத்தும் கும்பல்தான் இவர்கள். நம்ம ஊரில் இருப்பது போல இவர்கள் ஒன்றும் கத்தியால் ராத்திரியில் பைக்கில் செல்லும் போது வெட்டும் கும்பல் கிடையாது. இவர்களில் பலர் முன்னாள் ஆர்மி, பலர் முன்னாள் தீவிரவாத கும்பல்.

எலைட் ஆர்மி: உலகம் முழுக்க இப்படி பல எலைட் தனியார் ஆர்மி உள்ளது. ஆர்மியில் இருப்பவர்களை அதிக சம்பளத்திற்கு இவர்கள் வேலைக்கு எடுத்து பணி கொடுப்பார்கள். பெரும்பாலும் கொலை செய்வது, ஆட்சியை கவிழ்ப்பதே இவர்களின் பணி. ஸ்கெட்ச் போட்டு வெளி உலகிற்கே தெரியாமல் கொல்லும் திறன் கொண்டவர்கள் இவர்கள். அப்படி ஒரு கும்பல்தான் இந்த Wagner Group. 2014ல் உருவாக்கப்பட்டது இந்த கும்பல் ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கமாக பார்க்கப்படும் பிரைவேட் ஆர்மி.

ரஷ்யா அரசால் நேரடியாக செய்ய முடியாததை இந்த குழு மறைமுகமாக செய்யும். கொஞ்சம் மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள்.. 2017 கணக்குப்படி இந்த குழுவில் ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 6000 கொலைகாரர்கள் இருக்கிறார்கள். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா!

ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டது இந்த அமைப்பு. இன்னும் பல சின்ன சின்ன நாடுகளில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. ரஷ்ய அரசு மூலம் பல illegal கொலைகளுக்கு இந்த குழுதான் அணுகப்பட்டு வருகிறது. முக்கியமாக லிபியா, சிரியா, மாலி, மொசாம்பி, சூடான், ஆப்ரிக்கா போன்ற போர்கள் நடக்க கூடிய நாடுகளில் எல்லாம் இந்த குழு ரஷ்யா மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்களுக்கு எதிராக இருக்கும் குழுக்களை போட்டுத்தாக்க, அரசியல் தலைவர்களை கொலை செய்ய இந்த Wagner Group குழு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2015 -2018 வரை சிரியாவில் ரஷ்யா மற்றும் அந்நாட்டு அதிபர் பாஷர் அல் ஆசாத் குழுவிற்கு உறுதுணையாக ராணுவ ஆபரேஷனை இவர்கள் செய்து வருகின்றனர். இவர்களின் குழுவில் இருக்கும் 6000 பேரில் எல்லோருமே ஒன்று ராணுவத்தில் இருந்தவர்கள் அல்லது உளவுப்படையில் இருந்தவர்கள். இந்த குழுவை உருவாக்கியது டிமிர்ட்டி உட்கின் என்பர். இவர் ரஷ்யாவின் ராணுவத்தில் இருந்தவர். அதன்பின் அந்நாட்டு உளவுப்படையில் இருந்தவர்.

நடுங்கிய நாடுகள்: 2014ல் கிரிமியாவை உக்ரைனில் இருந்து பிரிக்க இவரின் செயல்கள் முக்கிய காரணம் என்கிறார்கள். அதேபோல் உக்ரைனில் அரசுக்கு எதிராக இருக்கும் புரட்சி படையை பின்னிருந்து இயக்குவது, ஆயுதம் வழங்குவதும் Wagner Groupதான் என்கிறார்கள். ரஷ்யா ஒரு காலத்தில் நாசிக்கு எதிராக இருந்தாலும் இப்போது புடினை நாசி ஆதரவாளராக மேற்கு உலகம் சித்தரிக்கிறது. அப்படி இருக்க Wagner Group குழுவில் இருக்கும் எல்லோரும் நாசி ஆட்சியை உலகம் முழுக்க உருவாக்க வேண்டும் என்று போராடும் அமைப்பு என்கிறார்கள்.

இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின் 1999 -2009 வரை ரஷ்யாவின் பல்வேறு ராணுவ பிரிவுகளில், உளவு பிரிவுகளில் வேலை பார்த்து இருக்கிறார். ஜெர்மனி நாசி வீரர்கள் அணிந்து இருக்கும் குறியீட்டை இவரும் டேட்டூவாக அணிந்து இருந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியானது. 2016ல் இவரின் "சேவைக்கு" மதிப்பாக அந்நாட்டு ராணுவத்தால் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

புரட்சி: இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் திடீரென வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமை உக்ரைனில் இருந்த வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி வந்தனர். ரஷ்ய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, வாக்னர் குழுவை ராணுவத்துடன் இணைக்க வேண்டும் என்று ரஷ்யா பாதுகாப்புத்துறை முயற்சி செய்தது போன்ற காரணங்களாலும், வாக்னர் குழுவினர் சிலரை ரஷ்ய ராணுவம் தாக்கியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமை உக்ரைனில் இருந்த வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி வந்தனர். இதனால் உள்நாட்டு போர் ஏற்படும், புடின் ஆட்சி கவிழ்க்கப்படும், பெரிய மோதல் உண்டாகும் என்றெல்லாம் கருதப்பட்டது. ஆனால் கடைசியில் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேசசுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவே வாக்னர் குழு வந்த வழியே திரும்பி சென்றது.

அதோடு வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் பெலாரசுக்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் சிஐஏ தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி சிஐஏதான் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜிக்கு பல பில்லியன் டாலர்களை கொடுத்து புடின் அரசை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்படுகிறது. புடின் ஆட்சியை முடிக்க வேண்டும், ரஷ்யாவில் பொம்மை ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று சிஐஏ முயன்றதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 6.2 பில்லியன் டாலரை கொடுத்து ஆட்சியை கவிழ்க்க சிஐஏ முயன்றதாகவும் ஆனால் அதை புடின் சிறப்பாக செயல்பட்டு முறியடித்துவிட்டதாகவும் சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

Is Russia Putin a mastermind behind the death of Wagner groups top leaders in place crash?

கொலை: அப்போதே வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் இனி நீண்ட நாட்கள் இருக்க மாட்டார் என்றெல்லாம் கணிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் பலியானார். அவரின் மரணத்திற்கு பின் ரஷ்ய அரசின் சூழ்ச்சி இருக்கலாம் என்று வாக்னர் குழு குற்றச்சாட்டு வைக்கிறது. இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின் என்பவரும் இந்த சம்பவத்தில் பலியாகிவிட்டார்.

இந்த மரணம் வாக்னர் குழுவின் முடிவுரையாக பார்க்கப்படுகிறது. வாக்னர் கூலிப்படை குழுவுடன் இணைக்கப்பட்ட சமூக ஊடகங்கள் இது பற்றி கூறுகையில் பிரிகோஜின் தனிப்பட்ட விமானம் ரஷ்ய வான் படை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறுகிறது. அதாவது ரஷ்ய ராணுவம்தான் இதை திட்டமிட்டு செய்ததாக கூறி உள்ளது.

ஒரு காலத்தில் புடினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், புடினுக்கு உணவு சமைத்து கொடுத்த அவரின் பர்சனல் சமையல்காரராக இருந்தவர்தான் பிரிகோஜின். அவர்தான் அதன்பின் வாக்னர் குழுவின் தலைவராகவும் ஆனார். தற்போது அதே பிரிகோஜின் மரணத்திற்கு காரணமும் புடின்தான் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பிரிக்ஸ் மாநாட்டில் புடின் பிசியாக இருக்கும் போதுதான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

ரஷ்யாவில் புடினுக்கு எதிராக பேசும் பலர் இப்படி கொல்லப்படுவது வழக்கம். அலெக்ஸ் நாவல்ணி தொடங்கி பலர் கொலை முயற்சிக்கு ஆளாகி இருக்கின்றனர். அப்படித்தான் பிரிகோஜின் இப்போது கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+