நம்ம பூமிக்கு மேலே 4 வகையான உயிரினங்கள் இருக்காமே... யாருக்காச்சும் தெரியுமா??
லண்டன்: நமது பூமிக்கு மேலே 25 மைல் தொலைவில் 4 வகையான உயிரினங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மில்டன் வெய்ன்ரைட் கூறியுள்ளார். இவர் ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவர்.
இவர் பெரிய ராட்சத பலூன் ஒன்றைப் பயன்படுத்தி அதன் மூலம் தூசுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பூமிக்கு மேலே 25 மைல் தொலைவில் அதாவது 40 கிலோமீட்டர் மேலே உயிரினங்கள் இருப்பதாக இவர் கூறுகிறார்.

வேற்றுகிரகவாசிகளாம்:
இதுவரை 4 வகையான உயிரினங்களைக் கண்டறிந்துள்ளதாகவும், இவை வேற்று கிரக உயிரினங்கள் என்றும் இவற்றை டிஎன்ஏ சோதனை மூலம் தான் உறுதிப்படுத்தியதாகவும் கூறுகிறார்.

இரண்டு ஆண்டுகளாக சோதனை:
கடந்த 2013ம் ஆண்டு முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார் மில்டன். தனது கண்டுபிடிப்புகளை நிரூபிக்க இவர் விஞ்ஞான சமுதாயத்திடம் போராடி வருகிறார். ஆனால் இவரது கூற்றுக்களை இதுவரை யாரும் ஏற்கவில்லை.

மிகப்பெரிய உயிரினங்கள்:
ஆனால் பூமியின் மேலே வேற்று உயிரினங்கள் உள்ளன என்பது இவரது வாதமாகும். தற்போது கண்டுபிடித்துள்ள 4 வகையான உயிரினங்களும், மிகப் பெரியவை என்றும் இவர் கூறுகிறார்.

பெயர் பேய்த்துகள்களாம்:
இந்த உயிரினங்கள் இங்கு பல காலமாக வாழ்ந்து வருவதாகவும் இவர் நம்புகிறார். கோஸ்ட் பார்ட்டிக்கிள்ஸ் என்று இவர் இதற்குப் பெயர் வைத்துள்ளார்.

அதெல்லாம் சுத்த கப்சா:
ஆனால் இது சுத்த கப்சா என்று விஞ்ஞானிகள் கூறி விட்டனர். இவர் பூமியில் உள்ள பொருட்களை வைத்து ஆய்வு நடத்தி முட்டாளாக்கப் பார்க்கிறார் என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications