சவுதியில் சிக்கித் தவித்த தமிழரை மீட்ட இந்தியன் சோஷியல் ஃபோரம்
ரியாத்: 18 மாதங்களாக ஊர் திரும்ப முடியாமல் சவுதியில் தவித்த தமிழரான ஆரோக்ய சாமி பீட்டர் இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியால் பத்திரமாக நாடு திரும்பியுள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்ய சாமி பீட்டர் (60) சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 18 மாதங்களாக வேலையில்லாமலும், காலாவதியான தனது இகாமாவை முதலாளி புதுப்பிக்காமலும், இதனால் வெளியில் நடமாட முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். அவர் நாடு திரும்ப முடியாமல் தவித்தார்.

முறைப்படியான விசா இல்லாமல் 18 மாதங்களாக தனது இகாமாவை புதுப்பிக்க முயற்சி செய்தும் ஆரோக்ய சாமியால் தாயகம் திரும்ப முடியாமல் போகவே இந்தியன் சோஷியல் ஃபோரம் அமைப்பின் உதவியை நாடினார்.
இதையறிந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் கோபார் கிளை சமூக நலத்துறை நிர்வாகிகள் அவரது பிரச்சினையை கவனத்தில் கொண்டு உடனடியாக சவுதி அரசின் காவல்துறை மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியையும் பெற்று அவரை பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கோபார் கிளையின் நிர்வாகி அப்துல் காதர் கடந்த 10.12.2015 அன்று ஆரோக்ய சாமிக்கான முறைப்படியான எக்சிட் வெளியேற்ற ஆணையை சவுதி அரசின் மூலம் பெற்று அவரை பாதுகாப்பாக புதுக்கோட்டைக்கு வழியனுப்பி வைத்தார்.
இந்தியன் சோஷியல் ஃபோரம் கோபார் கிளை நிர்வாகிகளின் மனிதநேய சேவையை தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி, மாநில தலைவர் காயல் அபுபக்கர், பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா ஆகியோர் பாராட்டினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications