சிரியாவில் பயங்கரம்: ஒரே நாளில் 280 பேரை கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிகள்
டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள அல் புகாலியா நகருக்குள் புகுந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 280 பேரை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளனர்.
சிரியாவின் கிழக்கு மாகாணமான தேர் அல் ஜூர் அருகே உள்ள அல் புகைலியா நகருக்குள் கடந்த சனிக்கிழமை காலை ஏராளமான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர் மற்றும் பல்வேறு அரசு கட்டிடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் பொது மக்களில் 280 பேர் பலியாகினர். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 75 பேரையும் கொலை செய்துள்ளனர்.
தேர் அல் ஜூர் பகுதியின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளுக்கும், சிரியா ராணுவத்திற்கும் இடையே மீண்டும் சண்டை துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக் எல்லையோரம் உள்ள விமானப்படைதளம் அருகிலும் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் ஒரே நாளில் 280 பேரை கொலை செய்துள்ளது உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications