ஐ.எஸ் அமைப்பில் சேர வீட்டை விட்டு வெளியேறிய 43 இளம் பெண்கள்: கவலையில் பெற்றோர்கள்
ஆம்ஸ்டர்டாம்: மேற்கத்திய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான இளம் பெண்களும், சிறுமிகளும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போரிடுவதற்காக செல்வது, உளவுத்துறையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் கவலையாக மாறியுள்ளது.
14, 15 வயதேயான இளம் சிறுமிகள் கூட ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக சிரியாவுக்குச் செல்லும் இளம் பெண்கள், அங்கு தீவிரவாதிகளை மணந்து கொள்வதும், அவர்களுக்கு செக்ஸ் அடிமைகளாக மாறி பிள்ளை பெற்றுக் கொடுப்பதும், கவலை தரும் விஷயமாக மாறியுள்ளது. அந்த அமைப்பில் இணையும் இளம் பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுத் தர ஆர்வம் காட்டுகின்றனர். அதிக குழந்தைகள் பிறந்தால், போராட்டத்திற்கு கூடுதலாக ஆட்கள் கிடைப்பார்கள் என்பதாலேயே இவ்வாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆரம்பத்தில் இளம் பெண்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் செக்ஸ் அடிமைகளாக வைத்திருப்பதாக கருதப்பட்டது. ஆனால் வீட்டு வேலை செய்வது உள்ளிட்ட பல வேலைகளுக்காகவும் அவர்கள் எடுப்பதாக தகவல்கள் தெரிவித்தன. தற்போது இந்தப் பெண்கள் வேறு பல வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ள பல பெண்கள் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களில் அவற்றைப் பற்றி பிரபலப்படுத்துகிறார்கள். இதில் ஈர்க்கப்படும் ஐரோப்பிய நாட்டு இளம் பெண்கள் தங்களின் சொந்த வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர் என்பதால் பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications