ஈராக்கில் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 50 பழங்குடியின ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கிராமங்களை சூறையாடுவது, பெண்களை கடத்தி செக்ஸ் அடிமைகளாக்குவது, ஆட்களை கொலை செய்வது என்று அட்டூழியம் செய்து வருகிறார்கள். அவர்களால் கடத்தப்பட்ட பெண்கள் சந்தைகளில் ஆடு, மாடுகளைப் போன்று விற்கப்படும் அவலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அன்பார் மாகாணத்தில் உள்ள ரமதியின் வடக்கே இருக்கும் ராஸ் அல் மா கிராமத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் அக்கிராமத்தில் வசித்து வந்த அல் பு நிம்ர் பழங்குடினத்தைச் சேர்ந்த 40 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளை இழுத்து வந்து பொது இடத்தில் அவர்களை வரிசையாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். தீவிரவாதிகள் அந்த 50 பேரின் தலையில் சுட்டனர்.
இது தவிர 17 பேரை கடத்திச் சென்றுள்ளனர். இந்த தகவலை அல் பு நிம்ர் பழங்குடியினத்தின் மூத்த தலைவர் ஷேக் நைம் அல் கௌத் தெரிவித்தார். மேலும் இந்த தகவலை அன்பார் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த மாதம் மட்டுமே ஆயிரத்து 273 பேர் வன்முறை சம்பவங்களில் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications