"படைக்குள்" கலகமூட்ட முயற்சி: பொது இடத்தில் 15 "வீரர்களை" சுட்டுக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
"படைக்குள்" கலகம் மூட்ட முயன்றதாக கூறி சொந்தப் படையினர் 15 பேருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மரண தண்டனை விதித்தனர். அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
மோசூல்: ஈராக்கின் மோசூல் நகரை கைப்பற்றும் நோக்கில் போரிட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகளின் கூட்டத்தில் கலகம் மூட்ட முயன்றதாக சொந்தப் படையை சேர்ந்த 15 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். அங்குள்ள பூங்காவில் பொதுமக்களின் முன்னிலையில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஈராகின் மோசூல் நகரை கைப்பற்ற ஈராக்-அமெரிக்க கூட்டுப்படைகளுடன் ஐஎஸ் தீவிரவாதிகள் தீவிரமாக போரிட்டு வருகின்றனர். நகரின் பெரும்பாலான பகுதி ஈராக் படையின் வசம் வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் கூட்டம் கூட்டமாக தலைமறைவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டும் மோசூல் நகரை கைப்பற்ற போராடி வருன்றனர். இநநிலையில் ஐஎஸ் அமைப்பினரிடையே கலகத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறி அந்த அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மரண தண்டனை விதித்தனர்.
இதற்காக அங்குள்ள பூங்காவிற்கு 15 இளைஞர்களையும் இழுத்துச் சென்ற தீவிரவாதிகள் 15 பேரையும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றினர். அந்த இளைஞர்கள் தங்கியிருந்த 5 வீடுகளையும் அவர்களின் வாகனங்களையும் ஐஎஸ் தீவிரவாதிகள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இதுவரை பிணைக் கைதிகள் மற்றும் அப்பாவி மக்களை மட்டுமே கழுத்தை அறுத்தும், துப்பாக்கியால் சுட்டும் கொன்று குவித்து வந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது சொந்தப் படையினரையும் கொல்ல தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications