ஐஎஸ்ஐஎஸ் மீண்டும் வெறித்தனம்.. ஸ்காட்லாந்து நபரின் தலையைத் துண்டித்து அட்டகாசம்!
வாஷிங்டன்: 2 அமெரிக்க பத்திரிக்கையாளர்களின் தலையை துண்டித்துக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்தைச் சேர்ந்த பிணையக் கைதியான டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் ஃபோலியின் தலையை துண்டித்து அதை வீடியோ எடுத்து கடந்த மாதம் 19ம் தேதி வெளியிட்டனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வரும் முன்பு கடந்த 2ம் தேதி மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபின் தலையை துண்டித்து அதையும் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
இரண்டு பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்ட போதிலும் ஈராக் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை அமெரிக்க தீவிரப்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

ஹெய்ன்ஸ்
கடந்த ஆண்டு சிரியாவில் பிணையக் கைதியாக பிடித்து வைக்கப்பட்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ்(44) என்பவரின் தலையை தீவிரவாதிகள் துண்டித்து சனிக்கிழமை வீடியோ வெளியிட்டுள்ளனர்.

தீவிரவாதிகள்
27 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் தீவிரவாதி ஒருவர் அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கு இந்த செய்தி என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து ஈராக்கில் உள்ள ஜிஹாதிகள் மீது தாக்குதல் நடத்தவது தவறு என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஒருவர்
அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தது இங்கிலாந்துக்கு மேலும் அழிவையே ஏற்படுத்தும். இதன் மூலம் ஏற்படும் போரில் இங்கிலாந்து மக்களால் வெற்றி பெற முடியாது. நாங்கள் மேலும் ஒரு இங்கிலாந்து நாட்டவரை கொலை செய்யப் போகிறோம் என்று தீவிரவாதி ஒருவர் வீடியோவில் எச்சரித்துள்ளார்.

டோனி பிளேர்
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரை போன்றே இஸ்லாமிய மாநிலத்திற்கு எதிராக தானாக சென்று அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். அமெரிக்காவிடம் முடியாது என்று தெரிவிக்க துணிவு இல்லாமல் இருக்கும் இங்கிலாந்து பிரதமர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அந்த தீவிரவாதி தெரிவித்துள்ளார்.

ஒபாமா
ஹெய்ன்ஸின் தலை துண்டிக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம் என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஒபாமா.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications